பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதயம்

'இண்டக் குலத்தை எடுத்துக்

களைந்த இருடீகேசன் தனக்கு'

(நாலா. 5:3-4)

இதயம் (heart) பார். "நெஞ்சம்"

இந்து (ஈச்சம்பழம்) Intu (dates)

(1) கருமை நிறம் - black colour

'இந்தின் கருவண்ணம்

கொண்டன்(று) எழில்வானம்'

(கார்.40:3)


இப்பி Ippi (pearl-oyster shell)

(1) வளமை - prosperity

'பல் மீன் கொள்பவர் முகந்த

இப்பி நார் அரி நறவின்

மகிழ்நொடைக் கூட்டும்'

(அகம்.296:8-9)

(2) வெண்மை - white

'மறிகடல் ஓங்கி வெள்ளிப்பியும்

சுமந்து' (திருஞான. தேவா.3777:6)

(3) இலக்கம் (ஒளி) - shine

'நலந்திகழும் இலங்கு இப்பி'

(திருஞான.தேவா.1830:2)

மே.காண். 'முத்தம்'

(ஒப்பு) Shell, Cowrie Shell, Scallop

Shell, conch அதிர்ஷ்டம்,

அரசத்தன்மை, உடல்,

கடவுட்டன்மை, கருவாய், கீர்த்தி,

செல்வம், தன்மானம், நற்பேறு,

நிலைபேறு, பிறப்பு,

புனிதத்தன்மை, பெண்மைக்

கொள்கை, மறுபிறப்பு,

மறைபொருள், மூலமுதல்,

யாத்திரை, வளமை,

வாழ்க்கைப்பயணம்.


இமை Imai

(1) காவல், பாதுகாப்பு - protection

'எண்ணுதற்கு ஆக்க அரிது

இரண்டு மூன்று நாள்

விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன்

வேள்வியை மண்ணினைக்

காக்கின்ற மன்னன் மைந்தர்கள்

கண்ணினைக் காக்கின்ற


இமையம்



இமையின் சாத்தனர்'

(கம்ப.பால.439)

இமைக்கும் அளவு Imaikkum alavu

(wink)

(1) காலச் சிறுமை, விரைவு - short

time, quick

'இமைக்கும் அளவில்தம்

இன்னுயிர்போம் மார்க்கம்'

(நாலடி.323:1)

இமையம் Imaiyam (Himalaya)

(1) உயர்வு - high

'ஞெமை ஓங்கு உயர் வரை

இமையத்து உச்சி' (நற்.369:7)

(2) பெரும்புகழ், அசைவின்மை

praise, stable


' .. .. .. பேரிசை இமயமும்

துளக்கும் பண்பினை'

(குறு.158:4-5)

(3) கடவுட்டன்மை - divinity

'கடவுள் நிலைஇய கல் ஓங்கு நெடு

வரை வட திசை எல்லை இமயம்

ஆக' (பதி.43:6-7)

(4) மேன்மை - superiority

'வரை அளந்து அறியாப் பொன்

படு நெடுங் கோட்டு இமயம்

சூட்டிய ஏம விற்பொறி'

(புறம்.39:13-15)

(5) அழகு - beauty

'எழில்பெறும் இமயத்து

இயல்புடை அம்பொன்' (திருவா.2:

140)

(ஆ) வடவரை Vatavarai

(mountain in the North)

(6) தொன்மை,முதிர்ச்சி - antiquity,

old

'தொன்று முதிர் வட வரை

வணங்கு வில் பொறித்து'

(அகம்.396:17)

(ஈ) வடபெருங்கல் Vata perunkal

(7) எல்லை / பாதுகாப்பு - border,

safety

'தென் குமரி வட பெருங்கல் குண

குட கடலா எல்லை' (புறம்.17:1-2)

(உ) இமயமலை Imayamalai