பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயந்திரப் படிவம்

கடவுட்டன்மை - divine

'முடிமன்னர் மூவரும்

காத்தோம்பும் தெய்வ வட

பேரிமய மலையில் பிறந்து'

(சிலப்.29:21-2)

(ஊ) இமகிரி Imakiri

(8) உயர்ச்சி - high

'வானுயர் இமகிரி மருங்கி

னென்று' (சூளா.825.2)

இயந்திரப் படிவம் Iyantirap pativam

(1) உயிரின்மை - lifeless

'இன் உயிர் இன்றி ஏகும்

இயந்திரப் படிவம் ஒப்பான்'

(கம்ப.சுந்.565:3)

இயற்கை அல்லன தோன்றுதல் Iyarkai

allana tonrutal (unnatural happenings)

(1) தீமை - bad,evil

'மாரி பொய்ப்பினும் வாரி

குன்றினும், இயற்கை அல்லன

செயற்கையில் தோன்றினும்,

காவலர்ப் பழிக்கும், இக் கண்

அகல் ஞாலம்' (புறம்.35:27-29)

இரத்தம் (blood) பார். 'குருதி'

இரவம் Iravam (a plant)

(1) பாதுகாப்பு / தீமை நீக்கம் -

safety,avoidance of evil

'தீங்கனி இரவமொடு

வேம்புமனைச் செரீஇ .. .. ..

பூம்பொறிக் கழற்கால்

நெடுந்தகைப் புண்ணே'

(புறம்.281:1-9)

இரவு (night) பார். 'கங்குல்'

இருட்டு (darkness) பார். 'இருள்'

இருட்டறையின் மலடு கறந்து எய்தல்

Iruttaraiyin malatu karantu eytal

(1) பயனின்மை - useless

'அப்போதைக்கு அப்போதும்

அடியவர்கட்கு ஆரமுதாம்

ஆரூரரை எப்போதும் நினையாதே


இரும்பு



இருட்டறையின் மலடு கறந்து

எய்தவாறே' (திருநா.தேவா.1223:5-

8)

இரு தலைக் கொள்ளி Iru talaik kolli

(brand burning at both ends)

(1) துன்பம் - sorrow

'இரு தலைக் கொள்ளி இடை

நின்று வருந்தி' (அகம்.339:9)

இரு தலைப் புள் Iru talaip pul

(fabulous bird with two heads)

(1) நட்பு / பிரிவின்மை

friendship / inseperable

'யாமே, பிரிவு இன்று இயந்த

துவரா நட்பின், இரு தலைப்

புள்ளின் ஓர் உயிரம்மே'

(அகம்.12: 4-5)

இருந்தை Iruntai

(1) கருமை நிறம், அறிவிலார் - black

colour,foolish

'பாலால் கழீஇப் பலநாள்

உணக்கினும் வாலிதாம் பக்கம்

இருந்தைக்கு இருந்தன்று'

(நாலடி.258:1-2)

இரும்பு Irumpu (iron)

(1) வலிமை - strength

'இரும்பின் அன்ன கருங்கோட்டுப்

புன்னை' (நற்.249:1)

(2) மேன்மை / அரிய தன்மை -

superiority/rare

'நெருநை வந்த விருந்திற்கு

மற்றுத்தன் இரும் புடைப் பழவாள்

வைத்தனன்' (புறம்.316:5-6)

(3) கொடுமை / இரக்கமின்மை -

cruel,pityless

'இரும்பினால் இயன்ற நெஞ்சத்து

இவர்களோ இருந்து காண்க'

(சீவக. 678:2)

(ஆ) அயில் Ayil

(4) ஆற்றல் - ability

'நல்லார் நலத்தை உணரின்

அவரினும் நல்லார் உணர்ப

பிறருணரார் - நல்ல மயிலாடு

மாமலை வெற்பமற்று என்றும்

அயிலாலே போழ்ப அயில்'