பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருவேரி

(பழமொழி.8)

(இ) காய்ச்சிய இரும்பு Kaycciya

irumpu

(5) செம்மை நிறம்

'மீ ச்செலும் மேகம் எல்லாம் விரி

சுடர் இலங்கை வேவ காய்ச்சிய

இரும்பு மானச் சேந்து ஒளி

கஞல்வ காணாய்'(கம்ப.யுத்.787:3-

4)

(ஈ) காயிரும்பு Kayirumpu

(6) வெம்மை

'காயிரும்பு அனைய வெய்யோன்

கருமணி வண்ணன் தன்மேல்'

(சூளா.1451:1)

(ஒப்பு) Steel, Iron அதிர்ஷ்டம்,

ஆயுதங்கள், ஆற்றல், இணைப்பு,

இரவு, உண்மை, உறுதி,

எளிமை, நயம், கருமை,

நடுநிலைமை, நம்பிக்கை,

நிலைபேறு, நீடிப்புத்தன்மை,

நீண்ட வாழ்நாள், நீதி,

பண்புயர்வு, பாதுகாப்பு,

புதன்கோள், போர்க்கவசம்,

வலிமை, வளமை; இருள்,

எளிதில் அடங்காமை, கடிய

தன்மை, கடினத்தன்மை,

கொடுமை, தண்டனை, வளையாத

தன்மை.

இருவேரி (வெட்டிவேரும் விலாமிச்சை

வேரும்) Iruveri

(1) நறுமணம் - fragarance

'நறையும் நாகமும் முறையிரு

வேரியும்' (பெருங்.உஞ்.50:22)

இருள் Irul (darkness)

(1) கருமை - black

'இருள் நிறப் பன்றியை ஏனம்

என்றலும்' (தொல்.1568:6)

(2) அச்சம் - fear

'நரை உரும் உரறும் நாம நல்

இருள்' (நற்.122:5)

(3) மயக்கம் - confusion

'மழை அமைந்து உற்ற மால் இருள்

நடுநாள்' (நற்.281:7)

இருள்


(4) மறைத்தல் - hide

'கனை இருள் புதைத்த அஞ்சுவரும்

இயவில்' (நற்.383:7)

(5) துன்பம் - sorrow

'ஞாயிற்று முன்னர் இருள் போல

மாய்ந்தது என் ஆயிழை உற்ற

துயர்' (கலி.145:65-66)

(6) செறிவு / வன்மை - dence

இவன் அல்லா நெஞ்சம் உறப்

பூட்டக் காய்ந்தே வல் இருள் நீ யல்

அது பிழையாகும் என' (பரி.6:

99-100)

(7) பகை - enmity

'ஈண்டு நீர்மிசைத் தோன்றி இருள்

சீக்கும் சுடரேபோல் வேண்டாதார்

நெஞ்சு உட்க வெருவந்த

கொடுகையும்' (கலி.100:1-2)

(8) இரவு - night

'வாராய் நீ புறம்மாற, வருந்திய

மேனியாட்கு ஆர் இருள்

துணையாகி அசைவளி

அலைக்குமே' (கலி.121:11-12)

(9) மாலைக்காலம் -evening

'அருளாய் ஆகலோ கொடிதே;

இருள் வர சீறியாழ் செவ்வழி

பண்ணி' (புறம். 144:1-2)

(10) தீமை - evil

'இருள்சேர் இருவினையும் சேரா

இறைவன் பொருள்சேர்

புகழ்புரிந்தார் மாட்டு' (குறள்.5)

(11) அழிவு, நரகம் - destruction, hell

'அடக்கம் அமரருள் உய்க்கும்

அடங்காமை ஆர் இருள்

உய்த்துவிடும்' (குறள்.1211)

(12) மறம் - unrighteousness

'மற இருள் இரிய மன்னுயிர்

ஏமுற' (மணி.21;165) (20) அறியாமை - ignorance

'உண்மை மாலீர்த்து இருள்கடிந்து

சாரையம் புண்விலங்கச்

சார்பொருளைப் போற்றினோர்'

(இன்னிலை.41;1-2)

(21) அறிவின்மை -ignorance

'அஞ்செழுத்தும் உணரா

அறிவிலோர் நெஞ்சும் என்ன

இருண்டது நீண்டவான்'

(பெரிய.1:5.159)

(22) அஞ்ஞானம் - ignorance

'தங்கிருள் இரண்டில் மாக்கள்

சிந்தையுள் சார்ந்து நின்ற

பொங்கிய இருளை ஏனைப்