பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லம்

புறைருள் போக்குகின்ற'

(பெரிய.1:10.2-3)

(23) அமங்கலம் - inauspicious

'மங்கல மரபிற் றல்லா மயங்கிருள்

மறைந்து போக' (சூளா.1548:5-6)

(24) மாயை

'இருள்கடிந்து அருளிய இன்ப

ஊர்தி' (திருவா.2:123)

(25) அடர்வு

'மொய்காட்டும் இருள் வாங்கி

முகம்காட்டும் தேர் இரவி'

(பெரிய.783)

(ஆ) இருள் பரத்தல் Irul parattal

துன்பம் - sorrow

'கதிரவன் மறைந்தனனே காரிருள்

பரந்ததுவே எதிர்மலர்

புரையுண்கண் எவ்வநீர்

உகுத்தனவே' (சிலப்.7:41)

(இ) இருள் விளக்குகளைச்

சூழ்தல் Irul vilakkukalaic cultal

(26) தீமை, அழிவு, இறப்பு - evil,

destruction,death

'விரியுமால் விளக்கினை

விழுங்குமால் இருள்'

(கம்ப.சுந்.373:4)

(ஒப்பு) Darkness அறியாமை,

இன்னல், இடையூறு, இழிவு,

இறப்பு, கொடிய தீர்ப்பு,

சிக்கல், தீமை.

இல்லம் Illam (clearing nut tree)

(1) கார்காலம் - rainy season

'முல்லை வைந் நுனை தோன்ற,

இல்லமொடு பைங் காற் கொன்றை

மென் பிணி அவிழ, .. .. .. கருவி

வானம் கதழ் உறை சிதறி, கார்

செய்தன்றே, கவின் பெறு கானம்'

(அகம்.4:1-8)

இல்லின் படுகாழ் Illin patukal

(தேற்றாங்கொட்டை)

(1) மாசு நீக்குதல், தெளிவித்தல்

make clear,clear

'சொல்லின் நுண்பொருள் காட்டி

இல்லின் படுகாழ்ப் படுத்துத்

தேய்வை உறீஇக் கலுழி நீக்கும்

இளமை



கம்மியர் போல மகர வீணையின்

மனமாசு கழீஇ' (பெருங்.உஞ்.35:

215-218)

(ஆ) தேறு Teru

தெளிவித்தல்

'தேறுபடு சின்னீர் போலத்

தெளிந்து' (மணி.23:142)

இலங்கை Ilankai

இலங்கை நகரமும் அதைச்

சுற்றியுள்ள மதில்களும் திசையும்

அழலுதல் Ilankai nakaramum ataic

curriyulla matilkalum ticaiyum alalutal

தீமை, அழிவு, இறப்பு, - evil omen

'திரியுமால் இலங்கையும் மதிலும்

திக்கு எலாம்' (கம்ப.சுந்.373:1)

இலவம் Ilavam (red flowered silk

cotton tree)

(1) சிவப்பு / செம்மை நிறம் - red

colour

'இலமலர் அன்ன அம்செந் நாவின்'

(அகம்.142:1)

(ஆ) இலவு Ilavu

(2) மென்மை - softness

'இலவினார் மாதர் பாலே

இசைந்து நான் இருந்து பின்னும்'

(திருநா.தேவா.2858:1)

இள மங்கையர் தீபம் கலசம் ஏந்தி

வந்து எதிர்கொள்ள மதுரை மன்னன்

எழுந்தருளுதல் Ila mankaiyar tipam

kalacam enti vantu etirkolla maturai

mannan eluntarulutal

(1) திருமணம்

'கதிர் ஒளித் தீபம் கலசம் உடன்

ஏந்திச் சதிர் இள மங்கையர் தாம்

வந்து எதிர்கொள்ள மதுரையார்

மன்னன் அடிநிலை தொட்டு

எங்கும் அதிரப் புகுதக் கனாக்

கண்டேன்' (நாலா.560)

இளமை Ilamai (youth)

(1) நிலையாமை - transitoriness