பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறை

'முறையுடை அரசன் செங்கோல்

அவையத்து' (குறு.276:5)

(7) ஆட்சி, அறம் - governing,

righteousness

'நல்அற நெறி நிறீஇ உலகு ஆண்ட

அரசன் பின்' (கலி.129:4)

(இ) அரசு Aracu

(8) வெற்றி - victory

'முரசு பாடு அதிர ஏவி, அரசு

படக் கடக்கும் அருமஞ்சமத்தானே'

(ஐங்.426:3-4)

(9) ஆளுகை - govern

'ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்,

மூத்தோன் வருக என்னாது,

அவருள் அறிவுடையோன் ஆறு

அரசும் செல்லும்' (புறம்.183:5-7)

(10) நிலைத்தன்மை - stability

'அரசு நிலை தளர்க்கும் அருப்பமும்

உடைய' (மலை.378)

(ஈ) மன்னன் / மன்னவன்

Mannan / Mannavan

(11) கடமை - duty

'கடன் அறி மன்னர் குடை நிழற்

போல' (நற்.146:4)

(12) சிறப்பு, அறம் - exellence,

virtue

'அறம் புரி செங்கோல் மன்னனின்

தாம் நனி சிறந்தன போலும்'

(ஐங் 290:1-2)

(13) நிலைத்தன்மை, ஆட்சி

stability, governing

'மாயா மன்ன! உலகு ஆள்

மன்னவா!'(பரி.3:85)

(14) வெற்றி, புகழ், ஒழுக்கம்

victory,fame,discipline

'வெல்புகழ் மன்னவன், விளங்கிய

ஒழுக்கத்தால்' (கலி.118:1)

(15) காவல், பாதுகாப்பு - security,

safety

'தன் உயிர் போலத் தழீஇ

உலகத்து மன் உயிர் காக்கும்

இம்மன்னனும் என்கொலோ'

(கலி.143:52-53)

(16) நீதிமுறைமை - justice

'.. .. .. முறைபுரிந்து அறன்நெறி

பிழையாத் திறன்அறி மன்னர்'

(அகம்.188:3-4)

(17) அச்சம் - fear


இறை



'உருகெழு மன்னர் ஆர்எயில்

கடந்து' (புறம்.392:6)

(18) தகுதி - qualification

பெருந்தகை மன்னர்க்கு

வரைந்திருந்தனனே' (புறம்.340:9)

(19) வீரம்/மானம் - brave/dignity

'புறப் புண் நாணி, மறத் தகை

மன்னன் வாள் வடக்கிருந்தனன்'

(புறம்.65:10-11)

(உ) வேந்தன் / வேந்து Ventan

(20) கடுமுனைப்பு - great effort

'உள்ளியது முடிக்கும் வேந்தனது

சிறப்பும்' (தொல்.1013:2)

(21) வெற்றி - victory

'வெம் முரண் யானை விரற் போர்

வேந்தே' (ஐங்.467:5)

(22) வலிமை - strength

வெந்திறல் வேந்தே! இவ்

உலகத்தோர்க்கே' (பதி.37:13)

(23) வளமை - prosperity

'எக்கர் இட்ட குப்பை வெண்மணல்

வைப்பின் யாணர் வளம்கெழு

வேந்தர்' (அகம்.181:13-14)

(24) பெருமை - proud

'நாடு கெழு செல்வத்துப் பீடு

கெழு வேந்தே' (புறம்.35:12)

(25) அறம், வீரம் - virtue,brave

'அறத்தின் மண்டிய மறப்போர்

வேந்தர்' (புறம்.62:7)

(26) உரிமை - authority

'முரசு கெழு வேந்தர் அரசு கெழு

திருவே' (புறம்.75:12)

(27) அறிவாற்றல் - efficient knowledge

'அறிவுடை வேந்தன் நெறியறிந்து

கொளினே'(புறம்.184:5)

(28) புகழ் - fame

'அடுதிறல் உயர் புகழ் வேந்தே!'

(மது.130)

(ஒப்பு) Emperor, King

அறிவாற்றல், ஆட்சி, ஆற்றல்,

உயர் விழிப்புணர்வு, உரிமை,

கடுமுனைப்பு,, சாதனை,

சான்றொழுங்கு, தன்னடக்கம்,

தியாகம், நிலையான தன்மை,

நீதி, பலம், பாதுகாப்பு,

புனிதத்தன்மை, வலிமை, வளமை,

வெற்றி.