பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

I

(1) இழிவு - low

'நிலத்துறும் கமலத்தை தேடும்

வண்டதீ தலைக்குறை கமலத்தைச்

சாரும் தன்மைபோல்' (தனிப்.31:3-

4)

ஈக்கால் Ikkal

(1) சிறிய அளவு - a little

'நாய்க்கால் சிறுவிரல்போல்

நன்குஅணியர் ஆயினும் ஈக்கால்

துணையும் உதவாதார்

நட்புஎன்னாம்' (நாலடி.218:1-2)

ஈங்கை Inkai (a tree)

(1) மாரிக்காலம் -rainy season

'மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன'

(அகம்.75:17)

(ஆ) ஈங்கை தளிர்த்தல் Inkai

talirttal (sprouting of Inkai)

(2) இளவேனில் spring season

'.. .. .. ஈங்கை நல் தளிர் நயவர

நுடங்கும் முற்றா வேனில் முன்னி

வந்தோரே' (நற்.86:7-9)

ஈச்சம்பழம் (dates) பார். 'இந்து'

ஈச்சிறகு Ecciraku

(1) சிறிய அளவு - a little

'.. .. .. யாக்கைக்குஓர் ஈச்சிறகு

அன்னதோர் தோல் அறினும்

வேண்டுமே காக்கை கடிவதுஓர்

கோல்' (நாலடி.41)

ஈட்டி (spear) பார். 'வேல்'


ஈமம் சேர் மாலை Emam cer malai

(1) இழிவு - low

'ஈமம் சேர் மாலை போல

இழிந்திடப் பட்டது அன்றே'

(சீவக.210:3)

ஈயல் Iyal (winged white ant / termite)

(1) வலிமையின்மை / புன்மை -

strengthless, low


உடம்பு


'நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல்

கெண்டி எல்லு முயல் எறிந்த

வேட்டுவன் கவல' (நற்.59:2-3)

(2) விரைந்தழிதல், நுண்மை, மிகுதி -

succeptible,mninute,excess

'நுண் பல சிதலை அரிது முயன்று

எடுத்த செம் புற்று ஈயல் போல,

ஒரு பகல் வாழ்க்கைக்கு

உலமருவோரே!' (புறம்.51:9-11)

(ஆ) சிதல் Cital

(3) அழிவு

'காழ் சோர், முது சுவர்க் கணச்

சிதல் அரித்த' (சிறுபா.133)

(இ) சிதலை Citavai

(4) அழிவு, பாழ், சிதைவு

'ஊர்எழுந்து உலறிய பீர்எழு

முதுபாழ், .. .. .. குயில்காழ்

சிதைய மண்டி, அயில்வாய்க்

கூர்முகச் சிதலை வேய்ந்த

போர்மடி நல்இறைப் பொதியி

லானே!' (அகம்.167:10,18-20)

(5) இறுதி, வானாள் சிறுமை, அழிவு,

மிகுதி

மண்ணுள்வாழ் சிதலைச் சாதி

மற்றவை வாழு நாள்கள்

எண்ணியாங்கு இகந்த பின்னை

இறகுபெய் தெழுங்கள் போலாம்'

(சூளா.1446:1-2)

(ஈ) ஈயல் கணம் Eyal kanam

(3) திறன் - tact

'புற்றகத்து ஒடுங்கி முற்றிய காலை

ஈரம் பார்க்கும் ஈயல் கணம் போல்

நேரம் பார்த்து நெடுந்தகைக்

குரிசிலை மீட்டிடம் பெற்றுக்

கூட்டிடம் கூடி' (பெருங்.உஞ்.57:

72-75)

(ஒப்பு) Termite இரகசிய அழிவு.



உச்சி (peak) பார். 'சிமை'

உடம்பு Utambu (body)

(1) நிலையாமை / அழிவு

transitoriness / destruction