பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடுக்கை

(ண) சிதர்வை Citarvai (worn out

dress)

(24) வறுமை - poverty

'நில்லா உலகத்து நிலைமை

தூக்கி, அந்நிலை அணுகல்

வேண்டி, நின்அரைப் பாசி

அன்ன சிதர்வை நீக்கி, ஆவி

அன்ன அவிர்நூற் கலிங்கம்

இரும்பேர் ஒக்கலொடு

ஒருங்குஉடன் உடீஇ'

(பெரும்.466-470)

(த) கூறை கொள்தல் Kurai Koltal

(get clothes)

(25) புகழ் - fame

'உருத்தெழு ஞாட்பினுள் ஒன்னார்

தொலையச் செருக்கினால்

செய்கல்லார் செய்வாரே போலத்

தருக்கினால் தம்மிறைவன் கூழுண்

பவரே கருக்கினால் கூறைகொள்

வார்' (பழமொழி.321)

(ந) அரத்தம் உடுத்தல் Arattam

ututtal

(26) பூப்புற்றல் - mensturation

'அரத்தம் உடீஇ அணிபழுப்பப்

பூசிச் சிரத்தையாற் செங்கழுநீர்

சூடிப் பரத்தை நினைநோக்கிக்

கூறினு நீமொழியல் என்று

மனைநோக்கி மாண விடும்'

(திணைமாலை.144)

(ப) கூறை கோட்படுதல் Kurai

Kotpatutal

(27) தீமை, இறப்பு, இழிவு

'கோவலன் கூறுமோர் குறுமகன்

தன்னால் காவல் வேந்தன் கடிநகர்

தன்னில் நாறைங் கூந்தல் நடுங்கு

துயரெய்தக் கூறைகோட் பட்டு.. ..

.. . . நனவு போல நள்ளிருள்

யாமத்துக் கனவு கண்டேன்

கடிதீங்கு உறுமென' (சிலப்.15:95-

106)

(ம) இடையிலே உடுத்திய ஆடை

நெகிழ்ந்து கையினிடத்தே

அசைதல் Itayile ututtiya atai nekilntu,

உடுக்கை



kaiyiniitatte acaital (waist dress

becoming loose)

(28) தீமை - evil omen

'ஒளிக்காசு ஒருபால் தோன்றத்

துயில்பதத்து அசைந்த அம்துகில்

கையகத்து அசைய நெகிழ்ந்த

நீரில் கண்கை ஆக'

(பெருங்.மகத.24:178-180)

(ம) துவர் ஆடை போர்த்தல்

Tuvar atai porttal

(29) துறவு

'துன்னம் செய்து ஆடையைத்

துவர் தோய்த்துக் கொட்டியும்

பொன்னம் செய்பத் தங்கப்

புகையூட்டிக் கைசெய்து தன்னமும்

அளித்தாய தலைசொறியு

யிடையிலையா லென்னவற்றினாம்

பயனை யெனக்கறிய

உரையென்றாள்' (நீலகேசி.270)

(ய) உடை துறத்தல் Utai turattal

(30) சமண சமயம்

'உடை துறந்தவர்களும் உடை

துவர் உடையாரும்'

(திருஞான.தேவா.185:1)

(ர) எரி படு துகில் Eri patu tukil

(31) அழிவு

'எரி படு துகிலின் நொய்தின்

இற்றது கடி கா என்றார்'

(கம்ப.சுந்.749:4)

(ல) கல் தோய் கலிங்கம் Kal toy

kalinkam

(32) சூளுறவு, உறுதி

'உற்றான் உற்ற உறுகண்டீர்க்கென

கல்தோய் கலிங்கம் கட்டிய

கச்சையன்' (பெருங்.உஞ்.46:96-97)

(வ) கொடுபடி கூறை Kotupatu

kurai

(33) கடுமை / கொடுமை

'கொள்ளி மாலையும் கொடிபடு

கூறையும் அகலும் .. .. .. கள்ளி

யாரிடைக் கலந்ததோர் தோற்றமும்

கடிதே' (நீலகேசி.30:2,4)