பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உமி

'கடும்புனல் நெருங்க

உடைந்துநிலை ஆற்றா உப்புச்

சிறைபோல் உள்நெகிழ்ந்து உருகி'

(பெருங்.மகத.20:120-121)

(உ) நீருறும் உப்பு Nirurum uppu

(9) நிலையாமை, அழிவு, உருக்கம்

'நெருப்புறு வெண்ணெயும் நீருறும்

உப்பும் எனவி ங்ஙனே பொருப்புறு

தோகை புலம்புறல் பொய்யன்பர்

போக்குமிக்க' (திருக்கோ.22:315.1-

2)

(ஒப்பு) Salt அறிவு, அழியாமை,

ஒப்பந்தம், சுவை, தியாகம்,

தூய்மை, நலம், பாதுகாப்பு;

அழிதல், கசப்பு, தரிசு,

துரதிர்ஷ்டம், வளமின்மை;

கண்ணீர், வியர்வை, உடம்பு,

பெண்மை, வாழ்க்கை.

உமி Umi

(1) குறை, பயனின்மை, வீண் -

defect, useless

'நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக்

கொண்டாரை அல்லார் எனினும்

அடக்கிக் கொளல்வேண்டும்

நெல்லுக்கு உமிஉண்டு நீர்க்கு

நுரைஉண்டு புல்லிதழ் பூவிற்கும்

உண்டு' (நாலடி.221)

உமிக்குற்றல் Umikkurral (pounding

husk)

(1) பயனின்மை, வீண், துன்பம் -

useless,waste, suffer

'தமக்குற்ற தேயாகத்

தம்மடைந்தார்க் குற்ற தெமக்குற்ற

தென்றுணர விட்டக்கால் என்னாம்

இமைத்தருவி பொன்வரன்றும்

ஈர்ங்குன்ற நாட உமிக்குற்றுக்

கைவருந்து மாறு' (பழமொழி.348)

உயிர் Uyir (soul)

(1) இன்றியமையாமை, சிறப்பு -

necessity,greatness

'உயிரினும் சிறந்த நாணும் நனி

மறந்து' (நற்.17:8)

(2) நட்பு - friendship

உயிர்



'உயிர் ஓரன்ன செயிர் தீர்

நட்பின்' (நற்.72:3)

(3) இனிமை - sweetness

'நின் நயந்து உறைவி இன் உயிர்

உள்ளாய்' (நற். 168:7)

(4) பெறற்கருமை - rare

'.. .. .. நீசெல்வது, அந் நாள்

கொண்டு இறக்கும், இவள்

அரும்பெறல் உயிரே'

(கலி.5:18-19)

(5) நிலைபேறு, அழிவின்மை / அழிவு -

immortality, stability / destruction

'பொருள்மாலையாளரை உள்ளி,

மருள் மாலை மாயும் என் மாயா

உயிர்' (குறள். 1230)

(6) ஆதாரம் - support

'வளைகோல் இழுக்கத்து

உயிராணி கொடுத்தாங்கு'

(சிலப்.22:4)

(ஆ) ஆவி Avi

(7) முதன்மை / முக்கியம் - important

/ prime

'மண்ணில் வாழ்தரு மன்னுயிர்

கட்கெலாம் கண்ணும் ஆவியும்

ஆம் பெருங்காவலான்' (பெரிய.1:

3.14)

இன்றிமையாமை, அருமை

'ஆவி அனைய அரும்புதல்வன்'

(பெரிய.68:11)

(8) அருமை / இனிமை / விருப்பம்

'ஆவியின் இனிய எங்கள்

அத்தனார்க்கு அடுத்த தென்னோ'

(பெரிய.10.174)

(இ) உடம்பொடு உயிர் Utampotu

uyir

(9) ஒற்றுமை, இணைவு

'உடம்பொடும் உயிரிடை மிடைந்த

ஒற்றுமை வேற்றுமை விகற்பில்'

(நீலகேசி.64:1)

(ஈ) உடம்பும் உயிரும் Utampum

uyirum

(10) இணைமை, ஒற்றுமை, பிரியாமை

'உடம்பினொடு உயிரில் பின்னி

ஒருவயின் நீங்கல் செல்லா'

(சீவக.556:1)