பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊழி

சமம் கடந்த புகழ் சால், வேழம்'

(பரி.21:1-2)

(ஈ) ஏற்று ஊர்தி Etru urti (Bull)

(4) மேன்மை - superiority

'வெரு வந்த ஆறு என்னார்,

விழுப்பொருட்கு அகன்றவர் உருவ

ஏற்று ஊர்தியான் ஒள் அணி

நக்கன்ன' (கலி.150:12-13)

(5) சிவன்

'ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த

சீர் கெழு கொடியும் அவ் ஏறு

என்ப' (புறம்.கட.வா.3-4)

(உ) ஒருகால் ஊர்தி Orukal urti

(single wheel)

(6) இயக்கம்/விரைவு - action/speed

'பல்பூந் தண்பொழில் பகலுடன்

கழிப்பி, ஒருகால் ஊர்திப்

பருதிஅம் செல்வன்' (அகம்.360: 1-2)

(ஊ) பிணிமுக ஊர்தி Pinimuka

urti (Peacock)

(7) வலிமை - strength

'மணி மயில் உயரிய மாறா

வென்றி, பிணிமுக ஊர்தி, ஒண்

செய்யோனும்' (புறம்.56:7-8)

(ஒப்பு) Vehicle, Riding சாகசம்,

சிறப்புத் திறமை, பெருமை,

மெய்யுறு புணர்ச்சி, மேன்மை,

விரைவு, வெற்றி.

ஊழி Uli (aeon)

(1) நெடுமை - long

'நாள் இடைச் சேப்பின், ஊழியின்

நெடிதே!' (ஐங்.482:4)

(ஒப்பு) Aeon அளவிடற்கருமை,

ஆளுருவாக்குதல், எல்லையின்மை,

கடவுளின் கருத்து எடுத்துக்காட்டு,

நிலைபேறுடைமை.

ஊற்று Utru (spring)

(1) நீர்மை/அன்பு - liquid state/love

'கல் ஊற்று ஈண்டல கயன் அற,

வாங்கி, இரும் பிணர்த் தடக் கை

ஊற்றுக்கோல்


நீட்டி, நீர் நொண்டு, பெருங் கை

யானை பிடி எதிர் ஓடும்'

(நற்.186:1-3)

(2) வலிமை - strength

'குறுங்காழ் உலக்கை ஓச்சி,

நெடுங்கிணற்று வல்ஊற்று உவரி

தோண்டி' (பெரும்.97-98)

(3) உதவி, பயன் - help, use

'உறுபுனல் தந்துஉலகு ஊட்டி

அறுமிடத்தும் கல்ஊற்று உழியுறும்

ஆறேபோல் - செல்வம்

பலர்க்குஆற்றிக் கெட்டுலந்தக்

கண்ணும் சிலர்க்குஆற்றிச் செய்வர்

செயர்பால் அவை' (நாலடி.185)

(ஆ) ஊற்று நீர் Utru nir (spring

water)

(4) மிகுதி - excess

'மறப்பேன்மன் யான், இஃதோ,

நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர்

போல மிகும்' (குறள்.1161)

(5) அறிவு - knowledge

'தொட்டனைத்து ஊறும் மணற்

கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து

ஊறும் அறிவு' (குறள்.396)

(ஒப்பு) Spring, Fountain அறிவு

நுட்பம், ஆறுதல், ஆன்ம சக்தி,

இளமை, உண்மை, உயிர்மூலம்,

கன்னிமை, தாய்மை, நற்பேறு,

நிலைபேறு, பிறப்பு, புனிதம்'

மருத்துவ இயல்பு, மீட்பு,

முழுமை, வருங்கால வாழ்க்கை,

வழிபாடு, வளமை, விளைவளம்;

இறப்பு: தூய்மைப்படுத்துதல்.

ஊற்றுக்கோல் Utrukkol (staff)

(1) உதவி, பாதுகாப்பு - help, safety

'இழுக்கல் உடை உழி

ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம்

உடையார்வாய்ச் சொல்'

(குறள்.415)

(ஆ) ஊற்றங்கோல் Urrankol

(2) உதவி, துணை - help, support

,நல்ல வெளிப்படுத்துத் தீய

மறந்தொழிந்து ஒல்லை

உயிர்கூற்றங் கோலாகி'

(சிறுபஞ்.57:1-2)