பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எண்ணெய் சுண்ணம் தூவுதல்

kalutai marrum peykal puttiya terin mel

erI, civanta atai anintavanayt tenticai

nokkic cellutal

(2) தீமை, அழிவு, இறப்பு - evil

omen

'எண்ணெய் பொன் முடிதொறும்

இழுகி ஈறு இலாத் திண் நெடுங்

கழுதை பேய் பூண்ட தேரின்மேல்

அண்ணல் அவ் இராவணன் அரத்த

ஆடையன் நண்ணினன்

தென்புலம் நசைஇல் கற்பினாய்!'

(கம்ப.சுந்.368)

எண்ணெய் சுண்ணம் தூவுதல் Enney

cunnam tuvutal

(1) மகிழ்ச்சி - joy

'கண்ணன் கேசவன் நம்பி

பிறந்தினில் எண்ணெய் சுண்ணம்

எதிரெதிர் தூவிட ' (நாலா.13:2-3)

எய் Ey (porcupine)

(1) கடினம் - hard

'எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்

எருத்தின்' (நற்.98:1)

(ஒப்பு) Porcupine

கண்மூடித்தனமான சீற்றம்.

எயில் Eyil (wall)

(1) நிலைபேறு - stable

'மன் எயிலுடையோர் போல'

(நற்.150:5)

(2) காவல் / பாதுகாப்பு - security/safety

'அம்புடைஆர் எயில் உள் அழித்து

உண்ட'(பதி.20:19)

(ஆ) ஓர்எயில் Or eyil (lone fort)

(3) வறுமை / நலிவு - poverty/decline

'.. .. .. உடைமதில் ஓர் எயில்

மன்னன் போல' (நற்.43:10-11)

(இ) தூங்கெயில் Tunkeyil (hanging

fort)

(4) காவல், பாதுகாப்பு - security,

safety

எயில்



'கடவுள் அஞ்சி வானத்து இழைத்த

தூங்கெயில் கதவம் காவல்

கொண்ட' (பதி.31:18-19)

(5) வலிமை - strength

'ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந்

திறல் தூங்கு எயில் அறிந்த நின்

ஊங்கணோர் நினைப்பின்'

(புறம்.39:5-6)

(ஈ) அரணம் Aranam (fort)

(6) பாதுகாப்பு - safety

'கடிப்புக் கண் உறூஉம்

தொடித்தோள் இயவர், அரணம்

காணாது, மாதிரம் துழைஇய

நனந்தலைப் பைஞ்ஞிலம் வருக,

இந்நிழல் என' (பத்தி.17:7-9)

(உ) அரண் Aran

(7) பாதுகாப்பு - safety

'முனை கைவிட்டு முன்னிலைச்

செல்லாது, தூ எதிர்த்து பெறாஅத்

தா இல் மள்ளரொடு தொல்

மருங்கு அறுத்தல் அஞ்சி, அரண்

கொண்டு, துஞ்சா வேந்தரும்

துஞ்சுக' (பதி.81:33-36)

(8) காவல் - security

'அம்பு துஞ்சும் கடி அரணால்'

(புறம்.20:16)

(ஊ) சுவர் Cuvar

(9) பிரிவு - seperation

'தாள் வலம்படுப்பச் சேட் புலம்

படர்ந்தோர் நாள் இழை நெடுஞ்

சுவர் நோக்கி' (அகம்.61:3-4)

(10) தனிமை - lonely

'சேண்உறை புலம்பின் நாள்முறை

இழைத்த திண்சுவர் நோக்கி'

(அகம்.289:9-10)

(11) உறுதி / திண்மை - strong / firm

'காழ் சோர் முது சுவர்க் கணச்

சிதல் அரித்த' (சிறு.133)

(எ) மதில் Matil

(12) உறுதி, வலிமை, திண்மை -

strong, power, firm

'வந்து மதுரை மதில் பொரூஉம்

வான் மலர் தாஅய், அம் தண்

புனல் வையை யாறு'

(பரி.12:9-10)