பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எருக்கு

(13) காவல் - security

'நெடு நீர் மலி புனல், நீள் மாடக்

கூடல் கடி மதில் பெய்யும்

பொழுது'

(பரி.20:106-107)

(14) பாதுகாப்பு - safety

'உடை மதில் ஓர் அரண் போல,

அஞ்சுவரு நோயொடு

துஞ்சாதோனே!' (அகம்.45:18-19)

(ஏ) காப்பு Kappu

(15) காவல் - security

'அருங்கடிக் காப்பின் அகல்நகர்

ஒருசிறை' (அகம்.311:2)

(16) திண்மை - firmness

'புலிப் பொறிப் போர்க் கதவின்

திருத் துஞ்சும் திண்காப்பின்'

(பட்.40-41)

(ஐ) கோட்டை Kottai

(17) பாதுகாப்பு - safety

'விடர்ப் புலி பொறித்த கோட்டை'

(புறம்.174:17)

(ஒ) சிறை Cirai

பாதுகாப்பு

'சிறையில்லா மூதூரின் வாயில்

காப்பு இன்னா' (இன்னா.23:1)

(ஒப்பு) Wall, Fort அடைக்கலம்,

அறிவாற்றல், உரிமை, உயர்வு,

காதல், பாதுகாப்பு, பிரிவு,

வளமை, விழிப்புணர்வு,வீடுபேறு.

எருக்கு Erukku (Yarcum)

(1) காமம் - lust / passion

'மடலே காமம் தந்தது; அலரே

மிடை பூ எருக்கின் அலர்

தந்தன்றே' (நற்.152:1-2)

(2) எளிமை / புன்மை - simple

'புல் இலை எருக்கம் ஆயினும்,

உடையவை கடவுள் பேணேம்

என்னா' (புறம்.106:2-3)

(3) அறிவிலார், அழிவு, கல்லாமை -

ignorant,destruction,illiterate

'எல்லாத் திறத்தும் இரப்பப்

பெரியாரைக் கல்லாத்

துணையார்தாம் கைப்பிடித்தல்

சொல்லின் நிறைந்தார்

எலும்பு



வலையினாய்! அஃதால் எருக்கு

மறைந்துயானை பாய்ச்சி விடல்'

(பழமொழி.62)

(ஆ) எருக்கங் கண்ணி சூடுதல்

Erukkan kanni cututal (wearing yarcum

wreath)

(4) காமம் - lust / passion

'பூ எனக் குவிமுகிழ் எருக்கங்

கண்ணியும் சூடுப .. .. .. காமம்

காழ்க்கொளினே' (குறு.17)

எருமை (buffalo) பார். 'காரான்'

எலி Eli (Rat)

(1) புன்மை - low

'இல் எலி வல்சி வல் வாய்க் கூகை'

(அகம்.122:13)

(2) தீய முயற்சி - bad effort

'விளை பதச் சீறிடம் நோக்கி,

வளை கதிர் வல்சி கொண்டு,

அளை மல்க வைக்கும் எலி

முயன்றனையர் ஆகி'

(புறம்.190:13)

(3) சிறுமை - smallness,mean

'புலி பார்த்து ஒற்றிய களிற்று

இரை பிழைப்பின், எலி பார்த்து

ஒற்றாதாகும்' (புறம்.237:16-17)

(4) பகை / அழிவு - enmity / destruction

'ஒலித்தக்கால் என் ஆம் உவரி

எலிப்பகை நாகம் உயிர்ப்பக்

கெடும்' (குறள்.763)

(ஆ) எலிக்கணம் Elikkanam

(5) (விரைந்த) அழிவு

'பைவரி நாகத் தைவாய்ப் பிறந்த

ஒலிப்புயிர் பெற்ற எலிக்கணம்

போல ஒழிந்தோர் ஒழியக்

கழிந்தோர் காணா'

(பெருங்.உஞ்.56:273-275)

(ஒப்பு) Rat, Mouse அதிர்ஷ்டம்,

நன்றியறிதல், புத்திசாலித்தனம்;

அழிவு, அற்பமான நிலை,

இறப்பு, கோழைத்தனம், தீமை,

தூய்மையற்ற நிலை, பகட்டு,

வறுமை, வெற்றாரவாரம்.

எலும்பு (bone) பார். 'என்பு'