பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எறும்பிடை நாங்கூழ்

'நுண் பல் ஏறும்பி கொண்டு

அளைச் செறித்த வித்தா வல்சி,

வீங்கு சிலை, மறவர் பல் ஊழ்

புக்குப் பயன் நிரை கவர'

(அகம்.377:3-5)

(ஆ) எறும்பு Erumpu

(2) முன்னறிதிறம், நுட்பம்

anticipation, subtle, minute

'பொய்யா எழிலி பெய்விடம்

நோக்கி, முட்டை கொண்டு வன்

புலம் சேரும் சிறு நுண்

எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப'

(புறம்.173:5-7)

(3) பேதைமை, வீண்முயற்சி - foolish,

futile

'ஆகாது எனினும் அகத்துநெய்

உண்டாகின் போகாது எறும்பு

புறம்சுற்றும் - யாதும் கோடாஅர்

எனினும் உடையாரைப் பற்றி

விடாஅர் உலகத்து அவர்'

(நாலடி.337)

(4) ஆக்கம், செயல் - active

'நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை

என்றிவைபோல் தம்கருமம் நல்ல

கடைப்பிடித்து' (ஆசார.100:1-2)

(இ) உறவி Uravi

(5) உறுதியின்மை / வலுவின்மை - weak

'ஆள்வினைக்கு எழுந்த

அசைவுஇல் உள்ளத்து ஆண்மை

வாங்க, காமம் தட்ப, அகைபடு

நெஞ்சம்! கண்கண் அகைய,

இருதலைக் கொள்ளி இடைநின்று

வருந்தி, ஒருதலைப் படாஅ உறவி

போன்றனம்' (அகம்.339:6-10)

(ஒப்பு) Ant அடக்கம்,

அறிவாற்றல்,இயல்புணர்ச்சி,கடும்

உழைப்பு, சீரான தன்மை,

செயலறிவு, பணிவு, புத்திகூர்மை,

பெருக்கத்தன்மை, வரிசைமுறை,

வலிமை, குறுகிய மனப்பான்மை,

பொறாமை, வலுவற்ற இயல்பு.

எறும்பிடை நாங்கூழ் Erumpitai nankul

(1) துன்பம் - trouble

'எறும்பிடை நாங்கூழ் எனப்

புலனால் அரிப்புண்டு அலந்த

ஏர்



வெறுந் தமியேனை விடுதி

கண்டாய்' (திருவா.6:25.1-3)

எறும்பு (ant) பார். 'எறும்பி'

எறுழ் Erul (a red flower)

(1) நன்மை / இன்பம்

goodness / pleasure

'வரு மழைக்கு எதிரிய மணி நிற

இரும் புதல் நறை நிறம் படுத்த நல்

இணர்த் தெறுழ் வீ' (நற்.302:4-5)

என்பு Enpu (bone)

(1) நெகிழ்ச்சி - melt

'உருகுபவை போல் என்பு, குளிர்

கொளீஇ' (பொரு.78)

(2) வலிமை - strength

'உரிவை தைஇய ஊன்கெடு

மார்பின் என்புஎழுந்து இயங்கும்

யாக்கையர்' (திருமுரு.129-130)

(3) அன்பு - love

'என்பி லதனை வெயில் போலக்

காயுமே அன்பி லதனை அறம்'

(குறள்.77)

(4) வறுமை - poverty

'உடும்பு உரித்தன்ன என்பு எழு

மருங்கின் கடும்பின் கடும் பசி

களையுநர்க் காணாது'

(புறம்.68:1-2)

(ஒப்பு) Bone அழிவின்மை,

ஆதாரம், உறுதி, சிறந்த பண்பு,

மீட்பு, வலிமை, வாழ்க்கை;

இறப்பு.

ஏர் Er (plough)

(1) உழைப்பு - hard work

'கல் அறுத்து இயற்றிய வல்உவர்க்

கூவல், வில் ஏர் வாழ்க்கை, சீறூர்

மதவலி நனி நல் கூர்ந்தனன்

ஆயினும்' (புறம்.331:1-3)

(2) வீரம் / மறம் - bravery

'இரைமுரசு ஆர்க்கும் உரைசால்

பாசறை, வில்ஏர் உழவின்நின்

நல்இசை உள்ளி' (புறம்.371:12-13)

(3) புலமை - poetic ability