பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏர்

'வில்லேர் உழவர் பகைகொளினும்

கொள்ளற்க சொல்ஏர் உழவர்

பகை' (குறள்.872)

(4) உழவு, உழவர் - ploughing,

farmer

'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்

அதனால் உழந்தும் உழவே தலை'

(குறள்.1031)

(ஆ) ஓர் ஏர் Or er

(5) தனிமை / துன்பம் - lonely / sorrow

'ஈரம்பட்ட செவ்விப் பைம்

புனத்து ஓர்ஏர் உழவன் போல

பெருவிதுப்பு உற்றன்றால்,

நோகோயானே' (குறு.131:4-6)

(இ) நாஞ்சில் Nancil

(6) உழவு, விளைவளம் - ploughing,

growth / fertility

'நிலம் கண் வாட, நாஞ்சில்

கடிந்து' (பதி.19:17)

(7) வளைவு - bend

'வாய் வாங்கும் வளை நாஞ்சில்'

(பரி.1:5)

(8) பயன் - use

'வறன் உழு நாஞ்சில் போல்,

மருப்பு ஊன்றி நிலம் சேர'

(கலி.8:5)

(9) வலிமை, வளமை - strength,

fertile

'கொடு மிடல் நாஞ்சிலான் தார்

போல் மராத்து' (கலி.36:1)

(10) வெற்றி - victory

'அடல் வெந் நாஞ்சில் பனைக்

கொடியோனும்' (புறம்.56:4)

(ஈ) நாஞ்சில் துஞ்சுதல் Nancil

tuncutal (idle plough)

(11) வறட்சி, வளனின்மை - drought

'நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச'

(அகம்.42:5)

(உ) உழுபடை Ulupatai

(12) பயன் - use

'பொருபடை தரூஉம் கொற்றமும்

உழுபடை ஊன்று சால் மருங்கின்

ஈன்றதன் பயனே' (புறம்.35:25-26)

ஏறு



(ஊ) பகடு Pakatu

உழைப்பு, வளமை

'துகள்தீர் பெருஞ்செல்வம்

தோன்றியக்கால் தொட்டுப் பகடு

நடந்தகூழ் பல்லாரோடு உண்க'

(நாலடி.2:1-2)

(ஒப்பு) Plough அமைதி,

அரசத்தன்மை, ஆண்மைக்

கொள்கை, இனப்பெருக்க்கம்,

உழைப்பு, கடமை, ஒப்படைப்பு,

கடவுட்டன்மை, நிறைவு, படைப்பு,

பயன், புனிதம், மறுசுழற்சி,

வளமை, விளைவளம்; கருமத்தில்

கண்ணாயிருத்தல்.

ஏழு Elu

(1) ஊழி, இசை - aeon, music

'ஏழு கொலாம் அவர் ஊழி

படைத்தன ஏழு கொலாம் அவர்

கண்ட இருங்கடல் ஏழு கொலாம்

அவர் ஆளும் உலகங்கள் ஏழு

கொலாம் இசை ஆக்கினதாமே'

(திருநா.தேவா.977)

ஏற்றியல் Erriyal (Taurus)

(1) வலிமை - strength

'உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல்

சேர' (பரி.11:4)

(ஒப்பு) Taurus அமைதி, உழவு,

உறுதி, செயல்முறை அறிவு,

தடுமாற்றமின்மை, தியாகம்,

நேர்மை, படைப்பு, பரந்த

மனப்பான்மை, பற்றின்மை, புரிந்து

கொள்ளும் திறன், மழை, மிகு

உணர்ச்சி, விளைவளம், வெற்றி.

{{u|ஏறு} Eru (male animal)

(1) பீடு, பெருமிதம், வீரம் -

greatness, bravery

'வாணுதல் கணவ! மள்ளர் ஏறே!'

(பதி.38:10)

(2) வலிமை, தலைமை - strength,

chief

'வலிமிகு முன்பின் அண்ணல்

ஏஏறு' (அகம்.146:1)

(3) மிடுக்கு, ஆளும் தன்மை