பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏறு

'ஆளரி ஏறு போல்வார் அவரை

முன் போக்கிப் பின்னே'

(பெரிய.3.12)

(ஆ) வெள்ளேறு Velleru

(4) மனைவி உயிருடன் இருத்தல்,

மகன் பிறப்பு - wife being alive;

birth of son

'வாய்ந்த வைகறை வையக

வரைப்பின் நாற்கடல் உம்பர் நாக

வேதிகை பாற்கடல் பரப்பில்

பனித்திரை நடுவண் வாயும்

கண்ணும் குளம்பும் பவளத்

தாயொளி பழித்த அழகிற் றாகி

விரிகதிர்த் திங்களோடு

வெண்பளிங்கு உமிழும்

உருவொளி உடைத்தாய்

உட்குவரத் தோன்றி வயிரத்து

அன்ன வைந்நுனை மருப்பில்

செயிர்படு நோக்கமொடு

சிறப்பிற்கு அமைந்ததோர்

வெண்தார் அணிந்த வெள்ளேறு

கிடந்த வண்டார் தாதின் வெண்

தாமரைப்பூ அங்கண் வரைப்பின்

அமரிறை அருள்வகைப்

பொங்குநிதிக் கிழவன் போற்றவு

மணப்ப மங்கலங் கதிர்த்த வங்கல்

உழாகத்துத் தெய்வ மகடூஉ

மெய்வயிற் பணித்துப் பையுள்

தீரக் கைவயிற் கொடுத்தலும்'

(பெருங்.வத்.5:65-80)

(இ) இளமையான இடபக்கன்று

கழகத்தினை அழிக்க

அங்குள்ளவர் சிதறி ஓடி,

நிழலில்லாத மரங்களில் ஏறி

நிற்றல் Ilamaiyana itapakkanru

kalakattinai alikka ankullavar citari oti,

nilalillata marankalil eri nirral (young

bull)

(5) தீமை, துன்பம் - evil omen

'மழவிடை இளங்கன் றொன்று

வந்துநங் கழகந் தன்னை உழறிடச்

சிதறி ஓடிஒருவருந் தடுக்க அஞ்சி

விழவொரு புகலு மின்றி மேதினி

தன்னை விட்டு நிழலிலா மரங்க

ளேறி நின்றிடக் கண்டோம்

என்பார்' (பெரிய.28:640)

ஐந்தை



ஏறு கொண்டு எறியும் பணை

(ஏறுகோட்பறை) Eru kontu eriyum panai

(a drum)

(1) முல்லைத் திணை - pastoral

'ஏறு கொண்டு எறியும் பணைக்

கோவலர்' (சூளா.14:1)



ஐந்து Aintu (five)

(1) ஐம்பூதங்கள் - five elements

'நீர், நிலம், தீ, வளி, விசும்போடு

ஐந்தும்' (பதி.24:15)

(2) ஐம்பொறிகள் - five sense organs

'ஐந்து இருள் அற நீக்கி,

நான்கினுள் துடைத்து' (பரி.4:1)

(3) ஐவகை நிலங்கள் - five regions

'மண்ணிடை ஐந்தினர் ஆறினர்

அங்கம்' (திருஞான.தேவா.3771:3)

(ஆ) அஞ்சு Ancu

ஐம்புலன்கள்

'அஞ்சும் ஒன்றி ஆறுவீசி நீறுபூசி

மேனியில்' (திருஞான.தேவா.2022:

1)

ஐம்பூதங்கள்

'நாவில்நாலர் உடல் அஞ்சினர்'

(திருஞான.தேவா.2428:3)

(ஒப்பு) Five ஆங்கில

உயிரெழுத்துகள், ஐந்து இதழ்களை

உடைய மலர்கள், ஐந்து

கோள்கள் (புதன், வெள்ளி,

செவ்வாய், வியாழன், சனி), ஐந்து

செயல்கள் (விருப்பம், உண்மை,

நம்பிக்கை, பணிவு, அன்பு), ஐந்து

நிறங்கள் (வெண்மை, கறுப்பு,

நீலம், சிவப்பு மஞ்சள்), ஐந்து

பருவங்கள், ஐம்புலன்கள், ஐந்து

முனைகளை உடைய நட்சத்திரம்.

ஐந்தை (கடுகு) Aintai (musturd)

(1) சிறுமை - smallness

'வெறுமை இடத்தும் விழுப்பிணீப்

போழ்தும் மறுமை மனத்தாரே

ஆகி - மறுமையை ஐந்தை

அனைத்தானும் ஆற்றிய காலத்துச்