பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐயவி

சிந்தியார் சிற்றறிவினார்'

(நாலடி.329)

ஐயவி Aiyavi (white mustard)

(1) மங்கலம் - auspiciousness

'ஐயவி அணிந்த நெய்யாட்டு

ஈரணி' (நற்.40:7)

(2) மருத்துவ குணம் / புனிறு -

healing, recency of delivery

'கடும்புடைக் கடுஞ் சூல் நம்

குடிக்கு உதவி, நெய்யோடு

இமைக்கும் ஐயவித் திரள் காழ்

விளங்கு நகர் விளங்கக்

கிடந்தோட் குறுகி, புதல்வன்

ஈன்றெனப் பெயர் பெயர்த்து'

(நற்.370:2-5)

(3) சிறுமை / சிறிய அளவு - small

quantity

'ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்'

(குறு.50:1)

(4) பாதுகாப்பு, காவல் - safety,

security

'நீயே, ஐயவி புகைப்பவும்

தாங்காது, ஒய்யென, உறுமுறை

மரபின் புறம் நின்று உய்க்கும்

கூற்றத்து அனையை'

(புறம்.98:15-17)

(ஆ) கடிப்பகை Katippakai

(5) சிறிய அளவு - small

'கடிப்பகை அனைத்தும், கேள்வி

போகா, குரல் ஓர்த்துத் தொடுத்த

சுகிர்புரி நரம்பின்' (மலை, 22-23)

(6) நுண்மை - minute

'கடிப்பகை நுன்கலுங் கவிரிதழ்க்

குறுங்கலும்' (சிலப்.30:57)

ஐயிரண்டு Aiyirantu

(1) திசைகள் - directions

'ஐயிரண்டும் ஆறொன்றும் ஆனார்

போலும்' (திருநா.தேவா.820:1)

ஐவர் Aivar (the five)

(1) ஐந்து கோள் - five planets

'ஞாயிறும், திங்களும், அறனும்,

ஐவரும்' (பரி.3:4-10)

(2) பாண்டவர் - Pantavas

ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி


'ஐவர் என்று உலகு ஏத்தும்

அரசர்கள் அகத்தரா' (கலி.25:3)

(3) ஐம்பூத தேவர்கள் -gods of five

elements

'ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப'

(திருமுரு.254)

(4) ஐம்பெருங் குழுவினர் - the

administrating group of five

'பொலம் பூண் ஐவர் உட்படப்

புகழ்ந்த மரம் மிகு சிறப்பின்

குறுநில மன்னர்' (மது.775-776)

(5) ஐம்புலன்கள் - five senses

'மெய்வரையான் மகள்

பாசன்றன்னை விரும்ப உடல்

வாழும் ஐவரை ஆசறுத்து ஆளும்

என்பர் அதுவும் சரதமே'

(திருஞான.தேவா.188:5-8)



ஒட்டகம் Ottakam (camel)

(1) விரைவு - speed

'குறும்பொறை உணங்கும்

ததர்வெள் என்பு கடுங்கால்

ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்'

(அகம்.245:17-18)

(2) உயர்ச்சி - high

'ஓங்கு நிலை ஒட்டகம் துயில்மடிந்

தன்ன' (சிறு.154)

(ஒப்பு) Camel அமைதி நிலை,

ஆசியா, ஊர்தி, செயலறிவு,

தகுதி, தன்னடக்கம், பணிவு,

மறைமுகத்தன்மை; இறப்பு,

காமவெறி, சீற்றம், செருக்கு,

தடுமாற்ற இயல்பு, பேராசை,

முட்டாள்தனம்.

ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி

Oru mulai arutta tirumavunni (a woman

who severed her breast) (1) இன்னல், துன்பம் - affiction,

suffer

'எரி மருள் வேங்கைக் கடவுள்

காக்கும் குருகு ஆர் துழனியின்

இதணத்து ஆங்கண், ஏதிலாளன்

கவலை கவற்ற, ஒருமுலை அறுத்த

திருமாவுண்ணிக் கேட்டோர்

அனையர் ஆயினும், வேட்டோர்