பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி

அல்லது, பிறர் இன்னாரே' (நற்.216: 6-11)

ஒளி Oli (light)

(1) கடவுட்டன்மை - divinity

'வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ' (பரி. 3:67)

(2) காவல், விழிப்புணர்வு, பாதுகாப்பு - security, awareness, safety 'ஒளிதிகழ் ஞெகிழியர் கவணையர், வில்லர் களிறு என ஆர்ப்பவர், ஏனல் காவலரே' (கலி. 52: 13-14)

(3) கல்வியறிவு - knowledge 'ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து' (புறம் 53:9)

(4) நன்மதிப்பு - honour

'.. .. .. பாசறை உளன் என வெரூஉம் ஓர்ஒளி வலன் உயர் நெடுவேல் என்னை கண்ணதுவே' (புறம் 309: 5-7)

(5) புகழ் - fame

'மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல் மன்னாவாம் மன்னர்க்கு ஒளி' (குறள். 556)

(6) பெருமை - glory

'ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்த்தும் எனல்' (குறள். 971)

(ஒப்பு) Light அடிப்படை மூலம், அறிவுத்திறம், அறிவுநுட்பம், அறிவுறுத்தல், அன்பு, ஆண்மைக் கொள்கை, ஆற்றல், ஆன்மீகத் தூய்மை, ஒழுக்கப்பண்பு, கடந்த காலம், கடவுள், கனவுகள், சூரியன், தூய்மை, தொடக்கம், நம்பிக்கை, படைப்பாற்றல், பார்வை, பிரகாசித்தல், மகிழ்ச்சி, மெய்ப் பொருள், வளமை, வாழ்க்கை, வானியல் ஆற்றல், விரிவுறுதல், வீடுபேறு.

ஒன்பது (nine)

(1) பண்கள் - musical notes

'பண்ணிடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர்' (திருஞான தேவா 3771:5)

ஓங்கல் (வானம்பாடி) Onkal (skylark)

(1) நீர்வளம்

'கள்ளின் இடும்பை களியறியும் நீர் இடும்பை புள்ளினுள் ஓங்கல் அறியும்' (நான். 97:1-2)

ஓடம் (boat) பார். 'நாவாய்'


ஓடு Otu (begging bowl)

(1) வளம்

வளத்தினால் மிக்க ஓடு வெளவினேன் அல்லேன்'

(பெரிய.2.27)

(2) இரத்தல் -beg

'ஓடே கலன் உண்பதும் ஊரிடு

பிச்சை' (திருஞான.தேவா.1616:1)

மே.காண். 'கடிஞை'

ஓடு நீரிணை ஓட்டைக் குடத்து மூடி

வைத்தல் Otu nirinaik kutattu muti

vaittal

(1) அறிவின்மை -foolish

'ஓடு நீரினை ஓட்டைக் குடத்து

அட்டி மூடி வித்திட்ட

மூர்க்கனோடு ஒக்குமே'

(திருநா.தேவா.2778:3-4)


ஓணம் Onam a star)

(1) நன்மை - goodness

'மாயோன் மேய ஓண நல் நாள்'

(மது.591)


(ஆ) திருவோணம்

(2) நன்னாள், கொண்டாட்டம் -

auspicious day,celebration

'.....திருவோணத் திருவிழாவில்

அந்நியம் போதில் அரியுருவாகி

அரியை அழித்தவனை' (நாலா.6:

3-6)

ஓனான் (chameleon) பார். 'ஓதி'

ஓதம் Otam (wave, billow)

(1) தடுமாற்றம், வருத்தம்

staggering,suffer