பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓதி

ஓவம்

'இருங் கழி ஓதம் போல் தடுமாறி'

(கலி, 123: 18)

(2) துன்பம்

'ஓதம் போல உடன்றுடன்று

நையநீ ஒண் தாமரை' (சீவக.1586:

3)ஓதி Oti (chameleon)

(1) வேனிற்காலம் - spring season

'வேனில் ஓதிப் பாடு நடை

வழலை ' (நற்.92: 2)

(2) மாற்றம் - change

"வேனில் ஓதி நிறம் பெயர் முது

போத்து' (நற்.186: 5)

(3) நன்மை - goodness

'வேதின வெரிநின் ஓதிமுது

போத்து ஆறுசெல் மாக்கள்

புட்கொளப் பொருந்தும்'

(குறு.140: 1-2)

(4) அகலாமை - without leaving

'வற்றல் மரத்த பொற் தலை ஓதி'

(அகம்.145:3)

(ஒப்பு) Chameleon அன்பு,

ஏற்புத்தன்மை, மாறும் இயல்பு;

பீதியியல்பு.


ஓமை Omai (a tree)

(1) வெப்பம் - heat

‘உவர் எழு களரி ஓமை அம்

காட்டு வெயில் வீற்றிருந்த வெம்பு

அலை அருஞ் சுரம்' (நற்.84: 8-9)

(2) பாதுகாப்பு - safety

'ஓமைஅம் பெருங்காட்டு வரூஉம்

வம்பலர்க்கு ஏமம் செப்பும்

என்றூழ் நீள் இடை'

(அகம்.191:9-10)

(3) வறட்சி - drought

'நிழல் இல் ஓமை நீர்இல்

நீள் இடை ' (அகம்.223: 8)

(ஆ) ஓமையம் பெருங்காடு

Omaiyam peruikatu (jungle of omai trees)

(4)துன்பம் - sorrow

'ஊர்பாழ்த் தன்ன ஓமையம்

பெருங்காடு இன்னா என்றி

ராயின்' (குறு.124: 2-3)


ஓரி ஒலித்தல் Ori olittal (howl of jackal)

(1) தீமை - bad omen

'ஊமைக் கூகையும் ஓரியும்

உறழுறழ் கதிக்கும் .. ..

தீமைக்கே இடனாயதோர்

செம்மலை உடைத்தே'

(நீலகேசி.29: 2-4)

ஓலை Olai (palm - leaf)

(1) ஆவணம் - document

'கயிறு பிணி குழிசி ஓலை

கொண்மார் பொறி கண்டு

அழிக்கும் ஆவணமாக்களின்'

(அகம்.77: 7-8)

(2) பாதுகாப்பு - safety

'மறப் புகழ் நிறைந்த மைந்தினோன்

இவனும், உறைப்புழி ஓலை போல,

மறைக்குவன் - பெரும நிற்குறித்து

வரு வேலே' (புறம்.290: 6-8)

(3) செய்தி - news |

'முழுதுடன் முன்னே வகுத்தவன்

என்று தொழுதிருந்தக் கண்ணே

ஒழியுமோ அல்லல் இழுகினா

னாகாப்ப தில்லையே - முன்னம்

எழுதினான் ஓலை பழுது'

(பழமொழி. 160)

ஓவம் Ovam (picture, portrait)

(1) அழகு - beautiful

'ஓவத்து அன்ன இடனுடை

வரைப்பின்' (நற்.182: 2)

(2) வினைத்திறன் - work efficiency

'ஓவத்து அன்ன வினை புனை நல்

இல்' (பதி. 61:3)

(3) குறிப்பு - note (suggestive)

'முன்னம் காட்டி, முகத்தின்

உரையா ஓவச் செய்தியின் ஒன்று

நினைந்து ஒற்றி' (அகம்.5: 19-20)

(ஆ) ஓவியம் Oviyam

(4) அழகு - beautiful

'பூந்துகில் மரீஇய ஏந்துகோட்டு

அல்குல், அம்மாசு ஊர்ந்த

அவிர் நூற் கலிங்கமொடு புனையா

ஓவியம் கடுப்ப, புனைவு இல்

தளிர் ஏர் மேனி' (நெடு. 145-148)

62