பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கங்குல்

(இ) ஓவு Ovu

(5) காட்சி இனிமை - beauty

perception

'ஓவுக் கண்டன்ன இரு பெரு

நியமத்து ' (மது. 365)


(ஒப்பு) Painting உண்மை

ஈடுபாடற்ற தன்மை ,

கட்டுப்பாடற்ற தன்மை, கழிகாமம்,

தந்திரம், பொய்ம்மை,

மாயத்தோற்றம், முட்டாள்தனம்.


கங்குல் Kankul (night)

(1) துயில் - sleep

'... ... .. மனையோள் கங்குல் ஒலி

வெள் அருவி ஒலியின் துஞ்சும்'

(நற்.77: 6-7)

(2) இருள் - darkness

'ஆர் இருட் கங்குல் அவர்வயின்'

(குறு.153: 4)

(3) கருமை - black

'மா இருங் கங்குலும், விழுத்

தொடி சுடர் வர' (பதி.81: 10)

(4) இறப்பு - death

'மன்பதை எல்லாம் மடிந்த இருங்

கங்குல்' (கலி.65: 3)

(5) தீமை - evil)

'இரை நசைஇப் பரிக்கும்

அரைநாட் கங்குல் ..... ... தீங்கு

செய்தனையே ஈங்கு வந்தோயே'

(அகம்.112: 4, 8)

(6) கையாறு / துன்பம் - suffering

'கடவுள் வழங்கும் கையறு

கங்குலும்' (மது. 651)



(ஆ) யாமம் Yamam

(7) துயில், மயக்கம் - sleep,

confusion |

'உறை மயக்குற்ற ஊர் துஞ்சு

யாமத்து ' (நற்.262: 3)

(8) இருள் - darkness

‘நள்ளிருள் யாமத்து இல் எலி

பார்க்கும்' (குறு.107:3)

(9) அச்சம் - fear

கங்குல்

'நள்ளென் யாமத்து, 'ஐ' எனக்

கரையும் |அஞ்சுவரு

பொழுதினானும்' (குறு.261: 4-5)

(இ) இரவு Iravu (night)

(10) இருள் / அச்சம் - darkness /

fear

'அரவு இரை தேரும் ஆர் இருள்

நடு நாள் இரவின் வருதல்

அன்றியும்' (நற்.285: 1-2)

(11) இடும்பை / துன்பம் - suffering

'இரவின் வரூஉம் இடும்பை நாம்

உய' (நற்.393: 8)

(12) துன்பம், பிரிவு - suffering,

seperation

'இன்பமும் இடும்பையும்,

புணர்வும் பிரிவும், நன் பகல்

அமையமும் இரவும் போல'

(அகம்.327: 1-2)

(ஈ) எல்லி Elli

(13) இருள், கருமை - darkness, black

'எல்லி அன்ன இருள் நிறப்

புன்னை ' (நற்.354:5)

(உ) அல்கல் Alkal

(14) மயக்கம் / மருட்சி / பொய்ம்மை

- confusion, false

'... .. .. .. அல்கல், பொய்வலாளன்

மெய் உற மரீஇய, வாய்த்தகைப்

பொய்க்கனா மருட்ட' (குறு.30: 1-3)

(ஊ) எல் El

(15) இருள் - darkness

'பொழுதும் எல்லின்று'

(குறு.161; 1)

(எ) அரையிரவு Arai iravu

(16) இருள் - darkness

'ஆர் இருள் அரை இரவில்'

(புறம்.229: 2)

(ஏ) நடுநாள் Natunal

(17) இருள் - darkness

'ஆர் இருள் நடுநாள் வருதி'

(குறு.141:7)

63