பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கங்கை


(ஐ) இரவு வானவில் தோன்றுதல்

Iravu vanavil tonnutal

(18) தீமை , அழிவு - evil omen

'இடுங்கொடி வில்லிர வெம்பகல்

வீழும் கடுங்கதிர் மீனிவை

காண்பென் காணெல்லா'

(சிலப்.20: 6-7) |

(ஒப்பு) Night, Midnight இரகசியம்,

உறக்கம், கருமை, கருவில்

இருக்கும் நிலை, கனவு, கேட்டல்,

செழுமை, தனிமைநிலை, நட்பு,

நிலைபேறு, பெண்ணியல்பு,

மயக்கநிலை; அறிவிழந்த நிலை,

இருள், இறப்பு, கீழுலகம்,

சதித்திட்டம், சிக்கல், சூது, தீமை,

தீய எண்ணங்கள், துன்பமேற்கிற

நிலை, தெளிவற்ற நிலை,

தொந்தரவு, பில்லி சூனியம்.

கங்கை Kankai (Ganga)

(1) காமப் பெருக்கு - flooding passion

'வாஅன் இழிதரும் வயங்கு வெள்

அருவிக் கங்கைஅம பேர் யாற்றுக்

கரை இறந்து இழிதரும் சிறை அடு

கடும் புனல் அன்ன, என் நிரை

அடு காமம் நீந்துமாறே'

(நற்.369:8-11)

(2) மேன்மை / உயர்வு - superiority

'மீன் ஆரம் பூத்த வியன் கங்கை

நந்திய வானம் பெயர்ந்த மருங்கு

ஒத்தல்' (பரி.16:36-37)

(3) செவ்வி / நிறைவு - perfectness,

fullness

'வளமழை மாறிய என்றூழ்க்

காலை, மன்பதை எல்லாம் சென்று

உண, கங்கைக் கரை பொரு மலி

நீர் நிறைந்து தோன்றியாங்கு,

எமக்கும் பிறர்க்கும் செம்மலை

ஆகலின்' (புறம்.161:5-8)

(4) வளமை - prosperity

'இமையவர் உறையும் சிமையச்

செவ்வரை, வெண்திரை கிழித்த,

விளங்குசுடர் நெடுங்கோட்டுப்

பொன்கொழித்து இழிதரும்

போக்குஅருங் கங்கைப் பெருநீர்

போகும் இரியல் மாக்கள்'

(பெரும்.429-432)

(5) களவு - conjugal love

கங்கை


'திங்கள்மாலை வெண்குடையான்

சென்னி செங்கோலது ஓச்சிக்

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்

புலவாய் வாழி காவேரி'

(சிலப்.7.2)

(6) விரைவு - speed, swift

'கடுவரல் கங்கைப் புனலாடிப்

போந்த' (சிலப்.29: 2.3)

(7) கடவுட்டன்மை , புனிதம் - divine,

holy |

'கங்கை என்னும் கடவுள் திரு நதி'

(கம்ப. அயோ .619: 1)

(8) தூய்மை - purity

'தூ நறுஞ்சடைக் கங்கைநீர்

தோய்ந்து வந்தாரோ' (பெரிய.518:

5-6)

(9) விரிவு - spreading -

'சுரும்பிவர் சந்தும் தொடுகடன்

முத்தும் வெண் சங்குமெங்கும்

விரும்பினர் 'பாற்சென்று

மெய்க்கணியாம் வியன்

கங்கையென்னும்' (திருக்கோ. 16:

248. 1-2)

(10) மங்கலம் - auspicious

'கங்கையின் களிற்றின் உச்சிக்

கதிர்மணிக் குடத்தில் தந்த மங்கல

வாச நன்னீர் - மணிநிறங்

கழீ இயது ஒப்ப' (சீவக.623: 1-2)

புனிதம் - holy

'பெரு நீர்த் திரை எழு

கங்கையிலும் பெரியதோர் தீர்த்த

பலம் தருநீர்ச் சிறுச்சண்ணம்

துள்ளம் சோரத் தளர்நடை

நடவானோ ' (நாலா .95: 5-8)

(ஆ) கங்கைப் புனலாடல்

Kankaip punalital

தூய்மை - purification

'கடுவரல் கங்கைப் புனலாடிப்

போந்த' (சிலப்.29:2.3)

(இ) கங்கையாடல் Kaikaiyatal

(11) தூய்மை, பாவம் தொலைத்தல் /

புண்ணியம் - removing sin

'மணிமேகலையை வான்

துயருறுக்கும் கணிகையர் கோலம்

காணாது ஒழிகெனக் கோதைத்

தாமம் குழலொடு களைந்து

போதித் தானம் புரிந்து அறம்

கொள்ளவும் என்வாய்க் கேட்டோர்

64