பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடல்

மணந்தவன்' (கலி.131: 1-2)

(12) காமம் - passion

'காமக் கடல் அகப்பட்டு'

(கலி.139:17)

(13) அச்சம் - fear

'உருகெழு பெருங்கடல் உவவுக்

கிளர்ந்தாங்கு' (அகம்.201: 9)

(14) பிறவி - birth

'பிறவிப் பெருங்கடல் நீந்துவர்

நீந்தார் இறைவன் அடி சேராதார்'

(குறள்.10)

(15) கீழ்மை - mean, low

'மிக்குப் பெருகி மிகுபுனல்

பாய்ந்தாலும் உப்பொழிதல்

செல்லா ஒலிகடல்போல் - மிக்க

இனநலம் நன்குடைய வாயினும்

என்றும் மனநலம் ஆகாவாம் கீழ்'

(பழமொழி.90)

(16) நீங்கா இன்பம் - pleasure

'சொல்லாமை நோக்கிக்

குறிப்பறியும் பண்பில் தம்

இல்லாளே வந்த விருந்தோம்பிச்

செல்வத்து - இடரின்றி ஏமாந்

திருந்தாரே நாளும் கடலுள் துலாம்

பண்ணினார்' (பழமொழி.330)

(17) பிறவித் துன்பம்

'எத்துணையானும் இயைந்த

அளவினால் சிற்றறம் செய்தார்

தலைப்படுவர் - மற்றைப்

பெருஞ்செல்வம் எய்தியக்கால்

பின்னறிதும் என்பார் அறிந்தார்

பழிகடல் அத்துள்' (நாலடி.272)

(18) நீலநிறம் - blueness

'இலங்கையில் எழுந்த சமரமும்,

கடல்வணன் தேர் ஊர் செருவும்

பாடி' (சிலப்.26: 238-239)

(19) ஒழுக்கம் - good conduct

'தாமார்ந்த சீலக் கடலாடிச்

சங்கினத்துள்' (சீவக.3040: 3)

(20) இன்பம் - joy

'திருவிற் றிகழ்காமத் தேன்பருகித்

தேவர் பொருவற் கரிய

புலக்கடலுள் ஆழ்ந்தார்'

(சீவக.3141: 3-4)

(21) மிக்க துன்பம் - excess sorrow

'துன்பக் கடலகத்து அழுந்த

வேண்டா ' (சீவக. 1914: 4)

(ஆ) பாற்கடல் Parkatal

(22) இறையிருப்பு - presence of god

கடல்


'தன் உரு உறழும் பாற்கடல்

நாப்பண், மின் அவிர் சுடர் மணி

ஆயிரம் விரித்த, கவை நா அருந்

தலைக் காண்பின் சேக்கைத்

துளவம் சூடிய அறிதுயிலோனும்'

(பரி.13: 26-29)

(23) அருள்

'அத்தர் தந்த அருட்பாற் கடலுண்டு'

(பெரிய.25: 1)

(24) வெண்மை

'வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு

பாம்பை மெத்தையாக விரித்து

அதன் மேலே' (நாலா.439: 1-2)

(இ) கடலுக்கு - எல்லை

தோன்றுதல் Katalukku ellai tonrutal

(25) அரிய தன்மை , இயல்பின்மை -

rare, unnatural

'இலங்குதிரைப் பெருங்கடற்கு

எல்லை தோன்றினும்'

(குறு.373: 2)

(ஈ) கடல் ஆடுதல் Katal atutal

(26) புனிதத்தன்மை , நன்மை - holy,-

good

'மலி ஓதத்து ஒலி கூடல், தீது

நீங்க, கடல் ஆடியும்' (பட்.98-99)

(உ) கடலைத் தூர்த்தல் Katalait

tirttal

(27) ஆற்றல் - power

.. .. கடல் தூர்க்குவனே'

(பட்.271)

(ஊ) திரை Tirai

(28) பொலிவு -

'பொம்மற் படு திரை நம்மோடு

ஆடி' (நற்.96: 4) |

(29) ஒலி | முழக்கம் - sound,

'இழை அணி அல்குல் விழவு ஆடு

மகளிர் முழங்கு திரை இன் சீர்

தூங்கும்' (நற். 138: 9-10)

(30) விரிவு - broad

விரிதிரை நீக்குவான்,

வியன்குறிப்பு - ஒத்தனர்'

(கலி.106: 19)

(31) வளமை - prosperity

'வரைய சாந்தமும், திரைய

முத்தமும்' (புறம்.58:11)


66