பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடல்

(எ) பௌவம்: Pauvam

(32) தண்மை , பேரளவு - cool, huge,

large

'தண் பெரும் பௌவ நீர்த்

துறைவற்கு' (நற்.291; 5)

(33) எல்லையின்மை - limitless,

boundless -

'கரை காணாப் பௌவத்து., கலம்

சிதைந்து ஆழ்பவன்' (கலி.134: 24)

(ஏ) மாநீர் Manir

(34) கருமை - black

'மணிக் கேழ் அன்ன மா நீர்ச்

சேர்ப்ப ' (குறு.49: 2)

(ஐ) முந்நீர். Munnir

(35) வள்ளன்மை / வண்மை

liberality

'கொளக் குறைபடாமையின்,

முந்நீர் அனையை' (பதி.90: 16)

(36) கடவுட்டன்மை . - divinity

'அணங்குடை முந்நீர் பரந்த

செறுவின்' (அகம்.207: 1)

(37) வலிமை - strength

'செருச்செய் முன்பொடு முந்நீர்

முற்றி' (அகம்.212: 18)

(38) ஆழம், பேரளவு, அளவின்மை

- depth, huge, limitless

'இரு முந்நீர்க் குட்டமும், .. ..

அவை அளந்து அறியினும்,

அளத்தற்கு அரியை'

(புறம்.20: 1,5)

(39) கருமை - black

'இருள் நிற முந்நீர் வளை இய

உலகத்து' (திருமுரு.293)

{40) இயக்கம் - active

'மணிநிற நெய்தல் இருங்கழிச்

சேர்ப்பன் அணிநலமுண்டு

அகன்றோனென்று கொலெம்

போற்றிணி மணல் எக்கர் மேல்

ஓதம் பெயரத் துணிமுந்நீர்

துஞ்சாதது' (ஐந்.எழு.58)

(41) வளமை, பயன் - prosperous,

usefull

'கண்திரள் முத்தம் பயக்கும்

இருமுந்நீர்' (ஐந்.எழு.59: 1)

(42) நல்வினை

கடல்



'செய்வினை என்னும் முந்நீர்த்

திரையிடை முளைத்துத்

தேங்கொள்' (சீவக.3145:1)

(ஓ) ஆழி Ali

(43) அழிவு - destruction

'ஊழி ஆழிக்கண், இருநிலம், உரு

கெழு கேழலாய் மருப்பின்

உழுதோய் எனவும்'

(பரி.3: 23-24)

(44) பிறப்பு / வாழ்க்கை - birth, life

'அற ஆழி அந்தணன் தாள்

சேர்ந்தார்க்கு பிற ஆழி நீந்தல்

அரிது' (குறள்.8)

(46) கொடை

'மாமாயாநீ தாநாழீ காசாதாவா

மூவாதா' (திருஞான தேவா,573: 2)

(ஓ) ஓதம் Otam

(45) அழிவு - destruction

'ஓதம் சுற்றியது ஊர் என, ஒருசார்'

(பரி.7: 29)

(ஔ) உவரி Uvari

(46) மிகுதி - excess

'ஒலித்தக்கால் என் ஆம் உவரி

எலிப்பகை நாகம் உயிர்ப்பக்

கெடும்' (குறள். 763)

(க) நீர் Nir

வளமை

'நீ ரான் வீறெய்தும் விளைநிலம்

நீர்வழங்கும் பண்டத்தாற்

பாடெய்தும் பட்டினம்

கொண்டாளும்' (நான். 86:1-2)

அச்சம்

'நாமநீர் வேலி உலகிற்கு

அவனளிபோல்' (சிலப். 1: 8)

(ங) அளக்கர் Alakkar

வளம் -

‘வளத்தொடும் பல ஆறு

மடுத்தலால் அளக்கர் போன்றன

ஆவண வீதிகள்' (பெரிய,94: 3-4)

(ச) மத்துறு கடல் Matturu katal

(47) கலக்கம்

'மத்துறு கடலின் தத்துறு

நெஞ்சினர்' (பெருங். உஞ்.56: 272)

67)