பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

99


னைகள் பலவற்றை எழுதியிருந்தார். கோளங்களுக்கிடையே பறந்து செல்லும் ராக்கெட்டுகள் பற்றி சிந்தித்தி ருந்தார். வானிலிருந்து இறங்குவதற்கு பாராசூட்டைப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றி விவரித்திருந்தார். இயற்பியல் அடிப்படையில் மட்டுமல்லாது, உயிரியல் அடிப்ப டையில் மனித உறுப்புகள் உயிரணுக்களாலானவை என்பதையும் அப்போதே தெளிவுபடுத்தியிருந்தார். இவைகளைப் பற்றியெல்லாம் அன்றைய மக்களுக்கு அறவே தெரியாது. அவற்றை அனுமானித்துக் கற்பனை செய்து பார்க்கும் மனநிலையோ சிந்தனைத் திறமோகூட அன்றைய மக்களிடம் இருக்கவில்லையெனத் துணிந்து கூறலாம். எனவே, இவரது புதினங்களில் கூறப்பட்ட அறிவியல் பூர்வமான விஷயங்களைப் படித்து ஜீரணிக்க இயலா நிலையில் சிறுபிள்ளைத்தனமான கற்பனை எனக் கேலி பேசினர். நம்பவே முடியாத அதீதக் கற்பனை என நையாண்டி செய்தனர். ஆனால், அவர் தனது புதினங்களில் கூறியிருந்த அறிவியல் செய்திகள். புத்தமைப்புகள், கண்டுபிடிப்புகள் அனைத்தும் வெறும் கற்பனையல்ல; கதைக்குதவாத ஊகங்களல்ல என்பதை காலம் இன்றைக்கு எண்பித்துள்ளது. இன்று விண்வெளியில் ராக்கெட்டுகள் பறந்து கொண்டிருக்கின்றன. விண்ணில் எடையற்ற தன்மையையும் பாராச் சூட்டில் மனிதன் வானிலிருந்து இறங்குவதையும் கண்கூடாகக் கண்டு வருகிறோம். மனித உறுப்புகள் உயிரணுக்களாலானவை என்பதை உலக விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறி, ஆண்டுகள் பலவாகிவிட்டன. இவ்வாறு சிரானோ டி பெர்ஜெராக்கின் அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையிலான ஊகங்கள், கற்பனைகள் அனைத்தும் உண்மையின்பாற்பட்டவை என்பது உறுதியாகியுள்ளது.

அறிவியல் துறையின் மாபெரும் வளர்ச்சிக்கு உந்து சக்தியான நுண்ணோக்காடியை லீவென்ஹுக் என்பவர்