பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



கண்டறிவதற்குப் பல ஆண்டுகட்கு முன்பே லூயி பாஸ்டி யூரும் மெக்னிக்கோவும் நுண்ணுயிர்களைக் கண்டறிவதற்கு இரு நூறு ஆண்டுகட்கு முன்பே இரத்தத்தில் நுண்ணுயிர்கள் இருப்பதையும் அவற்றை நோய் எதிர்ப் பொருள் எதிர்த்துக் கொண்டிருப்பதையும் பற்றி தன் நூல்களில் சிரானோ வலியுறுத்திக் கூறியுள்ளார். இன்றைய உயிரியல் பற்றி அறியும்போது சிரானோ கூறியுள்ள கருத்துகளும் விளக்கங்களும் நம்மைத் திகைப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தவே செய்கின்றன.

அதோடு அவர் நிற்கவில்லை. தன் நூல்களில் அறி வியல் அனுமானமாக ஒளிரும் பலூன்கள் இன்றைய பல்புகள் வடிவில் விளக்குகளை வடிவமைத்துக் கூறியுள்ளார். அது மட்டுமா அவர் பேசும் புத்தகம் பற்றியும் அற்புதமாகக் கற்பனை செய்து கூறியுள்ளார்.

அறிவியல் புனைகதை முன்னோடி

இனி, அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கிய முன் னோடிகளில் மூத்தவராக - முத்திரை பதித்தவராக விளங்கும் ஒரிருவரின் படைப்புகளின் வழியே, அவர்தம் படைப்புணர்வுச் சிந்தனைகளின் ஒளியில் அறிவியல் படைப்பிலக்கியப் போக்குகளை அறிந்து கொள்வது தமிழில் இத்துறையின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் வழிகாட்டும் ஒளி விளக்குகளாயமையும் எனக் கருதுகிறோம்.

அறிவியல் புனைகதை இலக்கியத் துறை அழுந்தக் காலூன்றித் தடம் பதித்து நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அன்று இருந்த அறிவியல் ஆய்வகங்களும் சோதனைக் கூடங்களும், அவற்றில் கண்டுபிடிப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட கருவிகளளெல்லாம்கூட இன்று பயனற்றுப் போய் விட்டன.