பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

105


எண்ணிக் குமைகிறான். அன்றையத் தினத் தாளைப் பார்த்தபோது தான் எண்ணியதற்கு மாறாக ஒருநாள் முன்னதாகவே பிரிட்டன் வந்திருப்பதை அறிகிறான். கிழக்குப் பக்கமாகப் பயணம் செய்ததால் ஒருநாள் அதிகரித்திருப்பதை உணர்கிறான். இதைத் தன் பயணத்தின்போதே உணரமுடியாமற் போனதற்குக் காரணம், தன் பயணத்தின்போது அங்குமிங்குமாக இழந்து கொண்டிருந்த நிமிடங்களை சூரியக் கடிகாரத்தில் அவ்வப்போது சரிசெய்து கொண்டே வந்ததால் இருபத்தி நான்கு மணி நேரமும் அவனுக்குக் கிடைத்துள்ளது. இதனால் ஒருநாள் அதிகரிப்பை அவனால் முழுமையாக உணர முடியாமல் போய்விட்டது. செய்தித் தாளில் குறிக்கப்பட்டிருந்த தேதியைக் கண்டபோதுதான் அவனால் இதை உணர முடிந்தது. எப்படியோ பிரிட்டனில் உள்ளவர்களை விட ஒரு நாள் அதிகமாக சூரியோதயத்தைக் கண்ட மகிழ்ச்சி அவனுக்கு ஏற்படவே செய்தது.

இவ்வாறு அறிவியல் உண்மைகளைக் கதையோட்டத்தோடு இணைத்து, படிப்போர்க்கு எளிதாகவும் சுவையாகவும் உணர்த்துவதில் வல்லமை மிக்கவராக விளங்குகிறார் ஜூல்ஸ் வெர்ன்.

ஜூல்ஸ் வெர்னின் அறிவியல் புனைகதைகளில் விளக்கப்படும் அறிவியல் செய்திகள் சில சமயங்களில் தவறானதாகவும் உண்மையிலிருந்து நழுவியதாகவும் அமைவதுண்டு. இதற்குக் காரணம் அவர் எடுத்துக்கொண்ட அறிவியல் செய்தியை நுணுக்கமாக அறிந்து தெளிந்த ஒரு வல்லுநர் அல்ல. தான் எந்த அளவுக்குப் புரிந்து கொண் டாரோ அந்தப் புரிந்துணர்வுக்கேற்ப அவற்றைத் தம் அறிவியல் புதினங்களில் கையாள்கிறார். இஃது கூடுமான வரை சரியாகவே அமைந்த போதிலும் பூமியின் மையத்தை GBT36 (Journey to the Centre of the Earth) போன்ற ஓரிரு புதினங்களில் சிறு தவறோடு அமைவதும் உண்டு.