பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

இவரது அறிவியல் புதினங்களில் இடம் பெறும் அறிவியல் அனுமானங்கள் இவர் அறிவியலின் எதிர்கால வளர்ச்சிப்பற்றிய அழுத்தமான, ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாயுள்ளது.

{{ }}நாம் இதுவரை அறிவியல் அடைந்துள்ள முன்னேற்றம் மிகக் குறைவானது. எதிர்காலத்தில் மிகப்பெரும் வளர்ச்சியை, - முன்னேற்றத்தை மனித குல அடையப்போகிறது என்பதில் மிகுந்த நம்பிக்கையுடையவராகத் திகழ்கிறார். இவரது புதினப் படைப்புகள் மூலம் வெளிப்படுத்தும் அறிவியல் கற்பனைகள் இதையே நமக்கு எடுத்தியம்புகின்றன. அறிவியலைவிட மனிதத்துவத்தில் அதிக மதிப்புடையவராக விளங்குகிறார் என்று கூறலாம்.

{{ }}அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக மனிதன் எந்திர உலகுக்கு அடிமையாகி விடுவானோ என்ற அச்சம் இன்றைய மனித குலத்தைப் பிடித்து ஆட்டவே செய்கிறது. அதே அச்சம் அவர் காலத்திலும் ஓரளவு இருக்கவே செய்தது. ஆனால் ஜூல்ஸ் வெர்னைப் பொறுத்தவரை அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்ப மேம்பாடும் மனிதனுக்கு ஊழியம் செய்வனவேயன்றி அவனை ஆட்டிப்படைப்பவை அன்று என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவரது அறிவியல் புதினப் படைப்புகள் மூலம் நன்கு உணர முடிகிறது. அறிவியல் வளர்ச்சி மனித நேரத்தை வெகுவாகக் குறைத்துள்ளதால் அந்நேரத்தை ஆழச் சிந்திப்பதிலும் முடிவெடுத்துச் செயல்படுத்தி வெற்றி காண்பதிலும் செலவிட வாய்ப்பாயமைகிறது என நூறு ஆண்டுகட்கு முன்பே கூறியுள்ளார்.

கருவும் உருவும்

{{ }}இன்று ஆங்கில மொழியில் அறிவியல் புனைகதை இலக்கியப் படைப்புகளைப் பெருமளவில் எழுதியவர்