பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


களில் ஐசக் அசிமோவ், பால் ஆண்டர்சன், ப்ராட்பரி, தியூக்ரோக் ஆர்தர் சி. கிளார்க், ராபர்ட் ஹைன் லைன், ராபர்ட் சில்வர் பெர்க், ஜூல்ஸ் வெர்ன், லங்கிராஃப்ட், ஹெச்.ஜி.வெல்ஸ், ஜான் விண்ட்ஹாம், காசன்ட்சேவ் போன்றவர்கள் குறிப்பிட்டத்தக்கவர்கள் ஆவர்.

{{ }}இவர்கள் அறிவியல் புனைகதைகளைப் படைப்பதற்கான கருவை எங்கிருந்து பெறுகிறார்கள்?

{{ }}இக் கேள்விக்கான விடையை பலரும் பல கோணங்களில் விவரித்துக் கூறியிருந்த போதிலும் இவர்களில் மிகப் பல நூல்களை (மொத்த 305, இவற்றுள் கதை நூல்கள் 118) வெளியிட்டுள்ள ஐசக் அசிமோவ் அவர்கள் பயனுள்ள முறையில், பட்டறிவின் அடிப்படையில் உரியவாறு விடையளித்துள்ளார்.

{{ }}ஐசக் அசிமோவ் என்ற பெயரே அவரை ஒரு ரஷ்யர் என இனங்காட்டி விடுகிறது. இவர் ரஷ்யப் பெற்றோர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்த போதிலும் சின்னஞ்சிறு வயதிலேயே பெற்றோர்களுடன் அமெரிக்காவில் குடியேறியவராவார். தன் ஆரம்பப் பள்ளிக் கல்வி முதல் முடித்ததெல்லாம் அமெரிக்காவில்தான். இவர் வேதியியல் பாடத்தில் பட்டம் பெற்றவர். ஆங்கிலம் நன்கு அறிந்தவரேயல்லாமல் ஆங்கில மொழி இலக்கியப் புலமை பெற்றவரல்ல. ஆயினும். ஆங்கில மொழியில் அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கியங்களை உருவாக்குவதில் தனக்கென தனிவழி கண்டு பெரு வெற்றி பெற்றவர்.

{{ }}இவர் பல சமயங்களில் தன் அறிவியல் புனைகதைப் படைப்புணர்வுகளை அவரது படைப்புகள் வழியே அவரது எழுத்துணர்வுகளை நாம் பகிர்ந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாயமையும் என்பதில் ஐயமில்லை.