பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9


மற்றவர்கள் பள்ளியில் பெற்ற அறிவியல் அடிப்படையைக் கொண்டு மேன்மேலும் தாங்கள் விரும்பும் அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து படித்து அதில் திறமையாளர்களாக உருப்பெறுகிறார்கள். அவர்கள் படிப்பதற்கேற்ப எளிமைப்படுத்தப்பட்ட அறிவியல் நூல்கள் ஆங்கி லத்தில் ஏராளம் உண்டு. இவற்றின் துணை கொண்டு அவர்கள் எத்தனை அறிவியல் பிரிவுகளைக் கற்றுத் தேற முடியுமோ அனைத்திலும் தேர்ச்சியும் அறிவியல் திறனும் பெற்று விளங்குகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அறிவியல் பட்டதாரி ஏதேனும் ஒரு அறிவியல் பிரிவைக் கற்றுத் தேறுகிறார். ஆனால், சுயமாக அறிவியலைக் கற்போர் இயன்ற அளவு பல பிரிவு அறிவாளர்களாக விளங்குகிறார்கள். அறிவியல் படைப்பிலக்கியத் துறையில் அழியாத் தடம் பதித்துச் சென்றுள்ள ஜூல்ஸ் வெர்னும் ஐசக் அசிமோவும் இவ்வாறு தங்கள் அறிவியல் அறிவையும் திறனையும் வளர்த்து வளப்படுத்திக் கொண்டவர்களே என்பதை அவர்கள் வரலாறுகள் எடுத்துக் கூறிக் கொண்டுள்ளன.

என்னதான் முயன்று உழைத்துத் தன் அறிவியல் அறிவைப் பெருக்கிக் கொண்ட போதிலும் அறிவியல் புனைகதை இலக்கியப் படைப்பாளன் தான் எந்த அறிவியல் பிரிவின் கூறை அடித்தளமாகக் கொண்டு இலக்கியம் படைத்திருப்பினும் அந்த அறிவியல் பிரிவின் வல்லுநரிடத்தில் காட்டி, ஒப்புதல் பெற்று, தவறின்றிப் பொதுமக்கள் மத்தியில் அடிப்புடையிலக்கியத்தை நடமாட விடுதலே பொருத்தமுடையதாகவும் சரியானதாகவும் அமைய முடியும். இன்னும் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூற வேண்டுமெனில் அறிவியல் வல்லுநனும் படைப்பிலக்கிய ஆசிரியனும் ஒன்றிணைந்து உருவாக்கும் அறிவியல் படைப்பிலக்கியங்களே எல்லா வகையிலும் சிறப்பாக அமையவி