பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

{{ }}சாதாரணமாக ஒரு அறிவியல் புனைகதைக்கான கருவைக் கண்டறிய அறிவியலின் பல்வேறு கூறுகள் பற்றி ஆழ்ந்து சிந்தித்து அவற்றுள் ஏதேனும் ஒரு கூறை-அறிவியல் அம்சத்தை புனைகதையின் மையமாக வைத்து, கதை பின்னத் தொடங்கிவிடுவது அவர் வழக்கம்.

{{ }}சிலசமயம் அறிவியல் புனைகதைக்கான கரு எதிர் பாராவண்ணம் இவர்மீது திணிக்கப்படுவதும் உண்டு. சான்றாக ஒருமுறை அசிமோவ் அறிவியல் கருத்தரங்கொன்றில் பார்வையாளராகக் கலந்து கொண்டார். அப்போது புகழ்பெற்ற அறிவியல் புனைகதை படைப்பாசிரியர் இருவருக்கிடையே அறிவியல் புனைகதை எழுதுவதற்கான உத்தி பற்றிய விவாதம் நடந்து கொண்ருந்தது.

{{ }}'அறிவியல் புனைகதையில்கூட தொழில்நுட்பங்களைவிட மனிதரின் உணர்ச்சிகளே முக்கியமானவை' என ஒருவர் வாதிட்டார். 'செயல் தூண்டுணர்ச்சி செம்மையாக இருக்குமானால் புளுட்டோனியம் 186 பற்றியெல்லாம் யார் கவலைப்படப் போகிறார்கள்?' என வினாவெழுப்பினார்.

{{ }}இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஐசத் அசிமோவ் அவர்கட்கு இக்கூற்று வியப்பாகவும் சிரிப்பாகவும் இருந்தது. காரணம், புளுடோனியம் - 186 என்று வாதிட்டவர் கூறியது நினைவாற்றலின் பிசகால், தவறாகக் கூறப்பட்டதாகும். ஏனெனனில், புளுட்டோனியம் - 186 என்று உலகில் எதுவும் இல்லை; இருக்கவும் முடியாது என்பதுதான் உண்மை.

{{ }}ஐசக் அசிமோவுக்கு உடனே பொறி தட்டியதுபோல் ஒரு சிந்தனை. புளுடோனியம் - 186 என்று ஒன்று இருப்பதாகவே கற்பனை செய்து ஒருகதை எழுதினால் என்ன?