பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

இதைக் கேட்ட உளவியல் வல்லுநரான அசிமோவின் துணையவியார் ஜேனட் மறுமொழியாக "கனவில் கண்ட அத்தகைய தொகுப்பு நூல் ஒன்றை நீங்கள் ஏன் இப்போது தயாரிக்கக் கூடாது?" என்று வினா வடிவில் வினவினாள்.

இது குறித்து மேலும் தொடர்ந்து எழுதுகிறார் :

“என் மனைவி கூறியதற்கிணங்க என் வாழ்க்கையில் நான் படித்த பழையஅறிவியல் புனைகதை களையெல்லாம் மீண்டும் படித்து “பொற்காலத்திற்கு முன்பு” (Before the Golden Age) என்ற தலைப்பில் தொகுத்து வெளி யிட்டேன். நான் கனவு கண்ட முதலாம் நினைவு நாளன்று அத்தொகுப்பு நூலை வெளியிட்டேன் எனத் தன் கனவுகூட வெளியீட்டிற்குத் துணையாயமைந்தைச் சுவைபடக் கூறியுள்ளார் ஐசக் ஆசிமோவ்.

தொடர்ந்து தான் அறிவியல் படைப்புகளை உருவாக்கு வதற்கான கருவும் தூண்டுதலும் தான் காணும் புதிரான கனவுகள் மூலம்மறு வடிவெடுத்திருப்பதைப் பற்றி மேலும்விளக்குகிறார்.

“ஒரு நாள் நள்ளிரவில் உறக்கத்தில் ஒரு புதிர் என் கனவில் தோன்றியது. ஒரு ஆள் சென்று கொண்டிருக்கிறான். நான் அவனைப் பின் தொடர்ந்து செல்கிறேன். அந்த ஆள் கடைசியில் ஒரு உணவு விடுதிக்குள் செல்கிறார். அங்கும் அவரைத் தொடர்ந்துசெல்கிறேன். ஆனால், அவர் திடீரென்று மறைந்துவிடுகிறார். அந்த உணவு விடுதியினுள் ஒரு சாய்வுக் கட்டில் காணப்படுகிறது. அதன் பின்புறப் பகுதி என்னை நோக்கியபடி இருக்கிறது. திடீரென மறைந்த அந்த ஆள், அந்தச் சாய்வுக் கட்டிலில் படுத்துக் கொண்டிருப்பதை என்னால் காணமுடிகிறது. "கருப்புத் தாரத்தை இழந்தவன் கதைக்கு எவ்வளவுபொருத்தமான கதை நிகழ்ச்சி!"என‌‌கனவிலேயே எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.