112
தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்
கதையில் நெடுங்காலத்திற்கு ஒருமுறை மட்டுமே விண்மீன்கள் ஏன் தோன்ற வேண்டும்? அவ்வாறு தோன்றும் போது, அறிவுள்ள மனித இனத்திடம் என்ன பாதிப்பு ஏற்படுகிறது? என்பதையும் விளக்க வேண்டும்' எனக் கோரினாராம்.
{{ }}நண்பர் விடுத்த அறைகூவலை ஏற்ற ஐசக் அசிமோவ் மேற்கூறிய கருவின் அடிப்படையில் “இரவின் தொடக்கம்' (Nightfall) எனும் அறிவியல் புனைகதையை எழுதினார். இஃது கேம்பலின் 'அதிசய அறிவியல் புனைகதை' இதழில் வெளிவந்தது. இந்தக் கதையும் மிகப் புகழ் பெற்ற தனிக் கதையாயமைந்தது. அதை எழுதியபோது ஐசக் அசிமோவின் வயது 21 ஆகும்.
{{ }}இவ்வாறு நண்பர்களாலும் பிறராலும் விடுக்கப்படும் சவால்கள். போடப்படும் புதிர்கள் போன்ற எதிர்பாரா நிகழ்வுகளில் அறிவியல் புனைகதைகள் சில உருவாக நேர்ந்தன என்றாலும் ஐசக் அசிமோவின் பெரும்பாலான அறிவியல் புனைகதைகள் பலவும் அவரது ஆழ்ந்த சிந்தனைகளின் விளைவாக உருப்பெற்றவைகளேயாகும். அறிவியல் நுணுக்கம், ஆய்வுப் போக்கு, வளர்ச்சித் தன்மை, பயன்பாடு; மேம்பாடு பற்றியெல்லாம் ஆழமாகச் சிந்தித்து உருவாக்கப்பட்டவைகளாகும். "இப்படி இருந்தால்?” என்ற வினா எழுப்பி அதற்குரிய விடைகாணும் வகையில் சிந்தித்துச் செயல்படுவது அவரது இயல்பாகும். இதைப் பற்றி அவரே விவரிக்கிறார்.
{{ }}“1956இல் கணிப்பொறிகள் புழக்கத்திற்கு வந்திருந்தன. அப்போதிருந்த கணிப்பொறிகள் இப்போதுள்ளவற்றைவிட செப்பமுறா நிலையில் இருந்தன. இக்கணிப் பொறிகளை எவ்வாறு மேம்படுத்தலாம் எனப் பல ஊகங்களை வெளியிட்டு வந்தார்கள். நானும் அதைப் பற்றி ஆழ