பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113


மாகச் சிந்திக்கத் தொடங்கினேன். இக்கணிப்பொறி எவ்வளவு தூரம் செல்லும்? அதனால் இதைச் செய்ய முடியுமா? அதைச் செய்ய முடியுமா? கணினி மனிதனை விஞ்சிவிடுமா? என்றெல்லாம் ஆழமாகச் சிந்தித்து, இறுதியில் ஒரு முடிவு தோன்றியது. அதன் அடிப்படையில் 'இறுதிக் கேள்வி” (The Last Question) என்ற தலைப்பில் கதை எழுதினேன். அது அறிவியல் புதினக் காலாண்டு" (Science Fiction Quaterly) என்ற ஏட்டின் 1956 நவம்பர் இதழில் வெளிவந் தது. “நான் எழுதிய கதைகள் அனைத்திலும் எனக்கு மிகவும் பிடித்தது இக்கதை தான்' எனக் கூறியுள்ளார்.

{{ }}ஐசக் அசிமோவ் மேலும், தான் அறிவியல் புனைகதைக்கான கருவை அறிவியல், தொழில்நுட்பத்துறைகளில் மட்டும் தேடிக் கண்டறிய முயல்வதோடமையாது அறிவியல், தொழில் நுட்பத்துறைகளின் போக்கு பற்றிய மனிதக் கண்ணோட்டங்களை கணித்து, அறிவியல் புனைகதை படைப்பதில் ஆர்வமிக்கவராக இருந்துள்ளார். இதைப் பற்றியும் அவரே விவரித்துள்ளார் :

{{ }}"சில சமயம் தொழில் நுட்பத்தை விடுத்து, மனிதக் கண்ணோட்டத்தைப் பற்றி நான் ஆழச் சிந்திப்பதுண்டு. கணிப்பொறிகள் சாதாரணமாகப் புழக்கத்திற்கு வந்துவிடுகிறது. மக்கள் வாழ்வின் இன்றியமையா அங்கமாகவும் ஆகி விடுகிறது. மக்கள் மனக்கணக்காகவோ அல்லது காகிதம் எழுதுகோல் கொண்டோ கணக்குப்போடும் ஆற்றலை இழந்துவிடுகிறார்கள். அப்போது என்ன நேரிடும்?”

{{ }}இக்கேள்விக்கு விடைகூறும் வகையில் ஆசிமோவ். "ஆற்றலின் உணர்வு" (The Feeling of power) என்ற நையாண்டிக் கதையை எழுதி 1958 பிப்ரவரியில் வெளியிட்டார்.