பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

{{ }}இவ்வாறு அவர் எழுதும் அறிவியல் புனைகதைகளில் கருவாக அமைந்து உருவெடுக்கும் பல்வேறு களங்களைப் பற்றித் தெளிவாக் கூறியுள்ளார் ஐசச் அசிமோவ் அவர்கள்.

{{ }}அதோடு, கதைக் கருவாக அன்றாட வாழ்வில் நடைபெறும் சாதாரண நிகழ்வுகளிலிருந்தெல்லாம் தான் எவ்வாறு கதைக் கருக்களைக் பெற்று அறிவியல் புனைகதை களைப் படைக்க இயலுகிறது என்பதை அனுபவப்பூர்வமாகத் தெளிவாக்குகிறார்.

{{ }}“என்னைப் பொறுத்தவரையில், ஒரு சொல்லை, ஒரு சொற்றொடரை, ஒரு மேற்கோளை, ஒரு வினாவை விதையாகக் கொண்டு எனது அறிவியல் புனைகதை முளைத்து வளர்ந்து விடுகிறது. இதை இன்னும் தெளிவாக உணர்த்த இன்னொரு உவமை கூறுவதாயின், எனது கதை என்னும் முத்துச் சிப்பியில் இவையெல்லாம் நுண் பரல்களாக அமைந்துவிடுகின்றன."

{{ }}இது குறித்து மேலும் தெளிவுப்படுத்தும் வகையில் விளக்குகிறார் :

{{ }}“சில சமயங்களில் எனது கதை முளைக்கும் விதையே கதையின் முடிவாக அமைவதுண்டு. எனது அறிவியல் கதைகளில் பெரும்பாலானவை ஏதாவதொரு வகையில் “மர்ம" கதைகளாக அமைந்துள்ளன. அவற்றுள் பல புதினங்களும். சிறுகதைகளும் உண்மையில் புதிர்க்கதைகளாகும். எனது அறிவியல் புனைகதைப் புதினங்களில் சில முற்றிலும் அறிவியல் புனைகதைகளாக இருப்பினும், நேரடியாக அவைகளை மர்மக்கதைகள் எனலாம். “எஃகுக் குகைகள்" (The Caves of Steels) (1954) “நிர்வாணச் சூரியன்"(The Nacked Sun) (1957), "வைகறை எந்திர மனிதர்கள் "(The Robots of Dawn) (1983) ஆகியவை இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகும். அதோடு, தனது அறிவியல் புனைகதைகளின்