பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

இவ்வாறுதான் எழுதியுள்ளேன்". எனத் தன் பட்டறிவின் அடிப்படையில் அறிவியல் புனைகதைப் படைப்புகளை உருவாக்குவதற்கான உத்திக ளையும் எழுத்தனுபவங்களையும் வெளிப்படையாகக் கூறி விளக்குகிறார் ஐசக் அசிமோவ் அவர்கள்.

தான் அறிவியல் புனைகதைப் படைப்பை உருவாக்குகையில் இடையிடையே ஏற்படும் மன உணர்வுகளைப் பற்றிக் கூறும்போது :

"கதை நடுவில் தடைபட்டு நின்றுவிட்டால் என்ன செய்கிறேன்?பெரும்பாலும் அவ்விதம் நேர்வதில்லை. புதி னமாகஇருப்பினும்,சிறுகதையாக இருப்பினும்,முடிவை முன்ன தாகவே தீர்மானித்து விடுவதால், அந்தக் குறிக்கோளை நோக்கி நான் எழுதிக் கொண்டே செல்கிறேன். என் குறிக்கோள் என்ன என்பது எனக்குத் தெளிவாகத்தெரிவதால்,இடையில் எழுத்து நின்றுவிடுவதில்லை.

"எதை எழுதுவது என்பதை முதலிலேயே தெளிவாகத் தீர்மானித்து விடுவதால், அதை எழுதும்போது மிக எளிதாக எழுதி முடித்து விடுகிறேன். தட்டச்சுச் செய்வதைப் போலவே விரைவாக எழுதுகிறேன். எழுதிய பின்னர் அதிகத் திருத்தங்கள் செய்ய வேண்டியிராது” எனக் கூறி தெளிவுபடுத்துகிறார்.

தனது அறிவியல் புனைகதைப் படைப்புணர்வை வாசகர்களோடு மனந்திறந்த நிலையில் பகிர்ந்து கொள்ள விழையும் ஐசக் அசிமோவ் மேலும் தன் படைப்பு உத்தியைத் தெளிவாக்கும் முறையில் திறந்த மனதுடன் “நான் கதைகளை அகக்காட்சி களாகஉருவாக்கிக்காண்பதில்லைஅத்தகைய ஆற்றலும் எனக்கில்லை. எனது கதை மாந்தர்களையோ அவ்வளவாக வர்ணிப்பதுமில்லை. இன்றியமை யாச் சூழ்நிலையில் தவிர, நான் எதையும் வர்ணிக்க