பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

யலும் என்பதைக் கருத்திற் கொள்வது அவசியம் எனக் கூற வேண்டியதில்லை.

உலகின் தலைசிறந்த அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கிய ஆசிரியர்கள் அனைவரும் வெற்றிகரமாகக் கடைப்பிடித்த வழிமுறையும் இதுவேயாகும். ஏனெனில் இவர்களில் பெரும்பாலோர் முழுக்க முழுக்க அறிவியல் துறை வல்லுநர்களாக முகிழ்த்தவர்கள் அல்லர். ஆர்வத்தினாலும் தேவையின் காரணமாகவும் அறிவியல் அறிவைப் படித்தும் விவாதித்தும் பெருக்கிக் கொண்டவர்கள். எந்த அறிவியல் கூறை எடுத்துத் தங்கள் படைப்புக்கு அடித்தளமாக்கிக் கொண்டாலும் அப்படைப்பு முழு வடிவு பெற்ற பின்னர், அத்துறை சார்ந்த அறிவியல் வல்லுநரிடம் காட்டி அவரது ஒப்புதல் பெற்ற பின்னரே நூலுருவாக்கி வெளியிட்டு வெற்றி பெற்றனர்.

சட்டம் படித்து வழக்கறிஞராக ஆக வேண்டுமெனப் பெரிதும் விரும்பிய ஜூல்ஸ் வெர்ன், அது இயலாதபோது எழுத்தாளராகி படைப்பிலக்கியம் எழுதலானார். பின்னர், அதையும் விடுத்து அன்று விரைவாக வளர்ச்சி பெற்று வந்த அறிவியல் அடிப்படையில் புனைகதைகள் படைக்கலானார். அதற்காகத் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அறிவியல் நூல்களை, துறைவாரியாகக் கற்றுத் தேர்ந்தார். அறிவியல் மேதையானார். எனினும், தான் உருவாக்கும் அறிவியல் புனைகதைப் படைப்புகளை, அவ்வத்துறை அறிவியல் வல்லுநர்களிடம் காட்டி, விவாதித்து செப்பம் செய்த பிறகே நூலுருவில் வெளியிடும் வழக்கத்தை வாழ்நாள் முழுமையும் கடைப்பிடித்தார். அதேபோன்று வேதியியல் பட்டதாரியான ஐசக் அசிமோவ் இயற்பியல், வானவியல், மின்னணுவியல் மற்றும் உயிரியல் துறைகளை அடியொற்றி அறிவியல் நூல்களாகவும் அறிவியல் புனை கதைப் படைப்பிலக்கியங்களாகவும் 300-க்கு மேற்பட்ட