பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
118

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



ஐசக் அசிமோவ் தன் எழுத்துப் பணியைப் பொறுத்த வரை அவர் யாரையும் முன்மாதிரியாகக் கொண்டு எழுதுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆங்கில இலக்கியங்களை அதிகமாகப் படித்தவரில்லை. ஆங்கில இலக்கியப் பட்டங்களேதும் பெற்றவரும் இல்லை. வேதியியலில் பட்டம் பெற்றவர் மட்டுமே. இதனால் அவர் அடிக்கடி தன் படைப்புகளைப் பற்றி - எழுத்துருவாக்கங்களைப் பற்றி பேசும்போது நான் 'எழுத்துக் கலையில் துறைபோகிய எழுத்தாளன் இல்லை' என்பதை வெளிப்படையாகக் கூறிக் கொள்வது வழக்கம்.

இதனால் அறிவியல் பற்றி கட்டுரையோ நூலோ அல்லது அறிவியல் புனைகதைப் படைப்புகளோ எழுத விரும்பும் யாரும் தன்னை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு தன் பாணியில் எழுதாது, அவரவர் போக்கில், உத்தியில் படைப்பிலக்கியம் படைப்பதே எல்லா வகையிலும் உசிதமானது எனக் கூறிக்கொள்வது வழக்கம்.

அவரவர்க்குத் தனிப் பணி

அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கியங்களைப் பொறுத்தவரை அவரவர்க்குள்ள அறிவியல் அறிவு, புரிந்து ணர்வு, நோக்கு கற்பனைத்திறன், எழுத்தாற்றல் எல்லாவற்றிற்கும் மேலாக சுவையாகக் கதைகூறிச் செல்லும் திறன் இவற்றின் அடுப்படையில் அவரவர்கென்றே தனிப்பாணி அமையும். உலகெங்குமுள்ள அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கிய ஆசிரியர்களிடையே இத்தன்மையைக் காண முடியும். ஒவ்வொருவருக்கும் ஒரு தகுதிப்போக்கு பாணி. ஆயினும் அவர்தம் பட்டறிவை அறிந்து கொள்வது மற்ற படைப்பாளர்களின் எழுத்தும், பாணியும் மேலும் மெருகடைய வாய்ப்பாயமையும். இந்த உணர்வின் அடிப்படையிலேதான் ஜூல்ஸ் வெர்ன், ஐசக் அசிமோவ் போன்ற