பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

119


வர்களின் எழுத்தனுபவங்களும் அவர்தம் கருத்து மற்றும் உணர்வுகளும் இங்கு சற்று விரிவாக விளக்கப்பட்டன.

இவ்விருவருடைய வாழ்க்கைப் போக்கினின்றும் நாம் பல்வேறு செய்திகளை அறிந்துணர முடிகிறது. அவையும் இன்றைக்கும் அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கியம் உருவாக்கம் குறித்து பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்படும் பல்வேறு வினாக்களுக்கு ஏற்ற விடையாக அமைந்துள்ளதென்றே கூறவேண்டும்.

அறிவியல் படைப்பிலக்கியத் தகுதிப்பாடு

அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கியம் உருவாக் கத்திற்கு அடிப்படைத் தகுதிப்பாடாக அமைவது அறிவியல் அறிவாகும். எந்த அறிவியல் செய்தியை அடியொற்றி புனைகதை இலக்கியம் படைக்க விரும்புகிறோமோ அந்த அறிவியல் செய்தியைத் தெளிவாக அறிந்துணர்ந்தவராக இருக்க வேண்டும். அதனை எந்த மொழியில் விளக்க முற்படுகிறாரோ அந்த மொழியில் ஒரளவு நல்ல தேர்ச்சி பெற்றவராகவும் எழுத்தாற்றல் மிக்கவராகவும் கற்பனைத் திறன் கைவரப் பெற்றவராகவும் கதை சொல்லும் ஆற்றல் பெற்ற வராகவும் இருக்க வேண்டுவது எல்லா வகையிலும் அவசியமாகும்.

ஆனால், தமிழைப் பொறுத்தவரை அறிவியல் தமிழ் படைப்பிலக்கிய உருவாக்கம் குறித்து ஒரு கருத்து அறிவியல் வல்லுநர்கள் சிலரால் அடிக்கடி கூறப்படுகிறது. எந்த அறிவியல் துறைச் செய்திபற்றி புனைகதை இலக்கியப் படைக்க விரும்புகிறாரோ அந்தத் துறை அறிவியல் படிப்பில் உயர் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அத்தகு வல்லுநர் மட்டுமே அறிவியல் புனைகதை இலக்கியம் படைக்க முடியும்; படைக்க வேண்டும். அப்போ