பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
120

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



துதான் அது, நம்பகத் தன்மையுடையதாக இருக்க முடியும் என்பதே அது.

அறிவியல் துறை ஆய்வு நூல் உருவாக்கத்துக்கு இக்க ருத்து ஏற்புடையதாயிருப்பினும் அறிவியல் புனைகதை படைப்பாக்கத்தைப் பொறுத்தவரை, எப்பொருள் பற்றி புனைகதை படைக்க விரும்புகிறாரோ அப்பொருளை நன்கு அறிந்தவராக இருந்தாலே போதும் என்பதைத் தான் ஜூல்ஸ் வெர்ன், ஐசக் அசிமோவ் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் போக்கு நமக்கு உணர்த்துகிறது.

ஜூல்ஸ் வெர்ன் எல்லோரையும்போல் பள்ளியிறுதி வரை மட்டுமே அறிவியல் பாடங்களைக் கற்றவர். உயர்கல்வியைப் பொறுத்து சட்டம் பயில விரும்பியவர். அது இயலாமற்போன நிலையில் படைப்பிலக்கியம் உருவாக்க விழைந்தார். பின்னர், அறிவியல் புனைகதை இலக்கியம் படைக்க முனைந்தார். அறிவியலில் எப்பொருள் பற்றி எழுது விரும்புகிறாரோ அப்பொருளைப் பற்றிப் படித்தறிந்தும் அத்துறை அறிவியல் வல்லுநரோடு விவாதித்து தெளிவடைந்தும் அறிவியல் புனைகதை படைக்கலானார். அவரைப் போன்றே ஐசக் அசிமோவும் சாதாரண வேதியியல் பட்டதாரி மட்டுமே. ஆனால், அறிவியல் எத்தனை துறைகள், பிரிவுகள் உண்டோ அத்தனையையும் பற்றி தானாகவே படித்தறிந்தவர். அறிவியலின் ஏதேனும் ஒரு கூறுபற்றி புனைகதை இலக்கியம் படைக்க விழைகிற போது அத்துறை வல்லுநரிடம் விவாதித்து ஐயம் தெளிந்து படைப்பிலக்கியம் உருவாக்கியவர். இவர்களின் போக்கிலிருந்து அறிவியல் படைப்பிலக்கிய உருவாக்கத்திற்கு எப்பொருளை அடிப்படையாகக் கொண்டு படைக்க முனைகிறாரோ அப்பொருளைப் பற்றிய அறிவும் தெளிவும் இருந்தால் போதும்.