பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

தமிழில் அறிவியல படைப்பிலக்கியம்

பாடத்திட்ட அடிப்படையில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் தேர்வுக் கண்ணோட்டத்துடன் படித்துத் தேர்வு பெறுகிறார். அவருக்கு அந்தப் பாடத்திட்ட வரையறைக்கு மேல், அதே துறை பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லாத நிலை. ஆனால், அறிவியல் புனைகதை படைக்க விழையும் ஆசிரியர், ஆர்வ மிகுதியால் தகவல்வேட்கையோடு நுணுக்கமாகவும் விரிவாகவும் அறிந்துணர்ந்து. தெளிய முற்படு வதால் இவரது அறிவியல் அறிவு சில சமயம் பட்டதாரியையும் விஞ்சியதாக அமைய நேர்கிறது.

அது மட்டுமல்ல, அறிவியல் என்பது நாளும் வளர்ந்து வளம் பெற்று வரும் ஒரு துறையாகும். ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. அறிவியல் பட்டதாரிகள் அனை வரும் தங்கள் துறையில் ஏற்பட்டு வரும் மாற்ற,திருத்தங்களை அல்லதுபுதியகண்டுபிடிப்புகளை தொடர்ந்து அறிந்துவருகிறவர்கள் எனக் கூறமுடியாது. ஒரு சிலர் அவ்வாறு அறிவதில் அக்கறை மிக்கவர்களாக இருக்கலாம். பெரும்பாலோர்பட்டம் பெற்றதோடு சரி.

ஆனால், அறிவியல் படைப்பிலக்கிய ஆசிரியன் தன் படைப்புக்கான அறிவியல் கருவைத் தேடியலையும் ஆர்வ லனாக இருப்பதால், தான் தேர்வு செய்யும் அறிவியல் கருவும் புத்தம் புதிதாக இருக்க வேண்டும் என்பதில் கருத்தூன்றியவனாக, புதுப்புது அறிவியல்செய்திகளைத் தேடியவனாகஉள்ளான்.அப்போது தான் அவன் உருவாக்கும் அறி வியல் புனைகதைகள் காலப் போக்கை முழுமையாகப் பிர திபலிப்பவைகளாக அமைய முடியும். இதனால் அவன் வளர்ந்து வரும் அறிவியலின் அனைத்துத் துறை வளர்ச்சி யோடும் ஒன்றி நின்று படைப்புகளை உருவாக்குகிற காலக் கட்டாயத்திற்கு ஆட்பட்டவனாக இருப்பது தவிர்க்க முடியாததொன்றாகும்.