பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123


எனவே, அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கிய ஆசிரியன் ஒரு அறிவியல் பட்டம் பெற்ற துறை வல்லுநனாகத்தான் இருக்க வேண்டும் என்ற கூற்று வலுவற்றுப் போய்விடுகிறது. படைப்புக்கு ஆதாரமாகத் தேர்வு செய்யும் அறிவியல் கருவுக்கான கூறு பற்றிய அறிவும் தெளிவும் இருந்தால்போதும்.மொழித்திறம், கற்பனை வளம், திறம் பட கதைகூறும் உத்தி ஆகியவற்றின் உறுதுணையோடு அறிவியல் புனைகதைப்படைப்பிலக்கியத்தை உருவாக்கி வெற்றிபெறவியலும்.

இனி, படைப்புக்கான அறிவியல் கருவை எவ்வகையில் தேர்வு செய்ய இருப்பினும் என்பதைப் பற்றிச் சிறிது ஆழ்ந்து சிந்திப்போம்.

அறிவியல் புனைகதைகளுக்கான அறிவியல் கருவை இரு வழிகளில் தேர்வு செய்யலாம். முதலாவது, இதுவரை கண்டறியப்பட்ட அறிவியல் உண்மைகளை, அதைப்பற்றிய தகவல்களைத் திரட்டி அவற்றை முறைப்படுத்தி, தான் படைக்கும் புனைகதை மூலம் உள்ளது உள்ளவாறே பாத்திரங்கள் வாயிலாகக் கதைப்போக்கில் எடுத்துக் கூறி விளக்குவது.

இதற்கு அடிப்படை அறிவியல் அறிவோடு தொடர்புடைய அறிவியல் செய்திகளைத் தொகுக்கும் திறனும் அவற்றை முறையாகக் கதை மூலம் பாத்திரங்களின் வழியே வெளிப்படுத்தும் ஆற்றலும் இருந்தால் போதும், அறிவியல் வல்லுநனாகவோ,ஆய்வறிஞ னாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

இரண்டாவது,கண்டறியப்பட்டுள்ள ஏதேனும் ஒரு அறிவியல் உண்மையை எடுத்துக் கொண்டு, அதனை அடியொற்றி, அக் கண்டுபிடிப்பு மேலும் எவ்வாறு வளர்ச்சி பெற்றால் சிறப்பாக இருக்கும் என்ற அனுமான அறிவுடன்