பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


இலக்கியங்களைப் படைத்தளித்தவர். அவரும் தனது அறி வியல் நூல்களையும் அறிவியல் புனைகதைப் படைப்பிலக் கியங்களையும் அவ்வத்துறை சார்ந்த வல்லுநர்களிடம் தந்து, செப்பனிட்ட பிறகே வெளியிடும் பழக்கத்தை மேற்கொண் டிருந்தார் என்பது வரலாற்றுச் செய்திகளாகும். எனவேதான் இந்நூலுள் இவ்விருவரின் அறிவியல் படைப்பிலக்கியப் பட்டறிவை, எழுத்துப் போக்குகளை, உத்திகளைப் பற்றி விரிவாக விளக்க நேர்ந்தது.

இன்றையக் காலச் சூழலில் எதிர்காலப் படைப்பிலக் கியத் துறை அறிவியல் புனைகதை இலக்கியத் துறையையே பெரிதும் சார்ந்துள்ளது எனலாம். கவைக்குதவாத வெறும் கற்பனைப் படைப்புகள் இலக்கியத் தரத்தைப் பெறவியலாத நிலை ஏற்படும். காரண காரியத்தோடு கூடிய அறிவியல் படைப்பிலக்கியங்களே மக்களின் உணர்வுக்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஆக்கபூர்வமான சிந்தனை வளர்ச் சிக்கும் வளமூட்ட வல்லவை எனும் கருத்து இன்று வாசகர்களிடையே அழுத்தம் பெற்று வருவது பாராட்டத்தக்க ஒரு மாற்றமாகும்.

அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கியத்திற்குரிய இலக்கணம் என்ன? மேனாட்டில் அதன் வளர்ச்சிப் போக்கு எத்தகையது? இங்கு அழுத்தமாக வளர இயலாமைக்கான காரணங்கள் என்ன? இந்தியச் சூழ்நிலையில், தமிழகப் போக்கில் அறிவியல் புனைகதை இலக்கியங்கள் எவ்வகைப் போக்கில் உருவாக்கப்பட்டால் அவை திறம் பட்டவைகளாக அமையவியலும் என்பதையெல்லாம் வர லாற்றுப் போக்கிலும் பட்டறிவின் அடிப்படையிலும் பல்வேறு கோணங்களில் ஆய்ந்துள்ளேன். இந்நூல் அறிவியல் புனைகதை இலக்கியம் படைக்க முயலும் படைப்பாளிகட்கும் வாசகப் பெருமக்களுக்கும் எல்லா வகை யிலும் வழிகாட்டி நூலாக விளங்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.