பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

130 தமிழில் அறிவியல்

              படைப்பிலக்கியம்

தெறித்துவிழுந்த பூமியின் மேற்பகுதியின் வெப்பம் குறைந்த போதிலும் அதன் உட்புறமுள்ள வெப்பம் இன்னும் குறையாமல் இருப்பதையும், அவ்வெப்பக்கனல் அவ்வப்போது பூமியைப் பிளந்து கொண்டு எரிமலைகளாக, அக்கினிக் குழப்புகளாக வாரிவீசிக் கொண்டு வெளிப்படுவதையும் மற்றும் சில பகுதிகளில் பூமி அதிர்ச்சிகளாகவும் நில வெடிப்புகளாகவும் இன்றும் அடையாளங்காட்டிக் கொண்டு வருவதையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டும் வகையில் தன் காதல் வெப்பத்தை வெளிப்படுத்துகிறான் கலைவண்ணன்.

தன் காதலியின் தன்மையைப் புகழும்போதுகூட,

"நீ சுத்தத் தங்கம்தான், நல்ல

                    தங்கத்தில் நகை செய்ய முடியாது;சிறிதே 
                       கலக்க

வேண்டும் செம்பு.”

எனக் கூறுவதன்மூலம் நெகிழ்கிறமுள்ள பசும்பொன்னைக் கெட்டித் தன்மையுடையதாக்க செம்பு சிறிது கலக்க வேண்டும் என்ற அறிவியல் உண்மையை அழகுபடக் கூறி விடுகிறார் கவியரசு. காதல் மொழியாகவும் அறிவியலைப் பேச முடியும் என்பதை எளிதாகப் புரிய வைக்கிறார்.

 ஆண் - பெண் வேறுபாட்டை 
 விளக்கவந்த கவிஞர்

"நமக்குள் ஆண்-பெண் என்ற

                    பேதம் நம்

அவசரத் தேவைக்காக மட்டும்

                 இருக்கட்டும்.

மற்றபடி பிறப்பு முதல் இறப்பு

            வரை உணர்ச்சியும்

வலியும் ஒன்று தான்".

என்பதை வலியுறுத்த முனையும்போது உயிரியல் அடிப்படையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறிதளவு இரத்த அளவு வேறுபடுவதை.