பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

132 தமிழில் அறிவியல்

              படைப்பிலக்கியம்
 “ஆமாம் ஒரு டன் கடல் 
                     தண்ணீர்
 .000004 கிராம் தங்கம் 
              வைத்திருக்கிறது
  ஆனால்,72 சதவிகிதம் மட்டும் 
                     தண்ணீர்
  கொண்ட உடலில் நீ 50 
                  கிலோகிராம்
  தங்கமல்லவா வைத்திருக்
                       கிறாய்
  நான் உன்னைக் 
       காதலிப்பேனா?
  கடலைக் காதலிப்பேனா?

எனக் காதலியின் காதல் ஊடல் வழியே கூற, ஒரு டன் கடல் தண்ணிரில் .000004 கிராம் தங்கம் உலோகம் கரைந்துள்ளது என்ற அறிவியல் உண்மையைக் காதல் மொழியோடு கலந்து தந்தும் நம் அறிவியல் அறிவை வளர்க்க முனைகிறார் கவிஞர். அத்தோடு நிற்காமல் பெண்கள் தங்க நகை வேட்கையால் உடலையே நகைக்கடையாய் அலங்கரித்து மகிழும் போக்கையும் நையாண்டி செய்யத் தவறவில்லை.

அது மட்டுமா?

 “கடல் இல்லையென்றால் 
        வானுக்கு நிறமில்லை.
  நீ இல்லையென்றால் என் 
                 வாழ்க்கைக்கு
  நிறமில்லை.
  "நீ கடல்; நான் பூமி என்பது 
               வெறும் உவமை
  அல்ல; உண்மை.
 "சூரிய வெப்பத்தை மெல்ல 
                       மெல்ல 
  உள்வாங்கி மெல்ல மெல்ல 
               வெளிவிடுகிறது
  கடல்-அணு அணுவாக அன்பு 
                    வயப்பட்டு

உயிர் நிறையக் காதலிக்கும்

            உன்னைப் போல."