பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133


என்றெல்லாம் தன் காதலியின் ஊடல் தீர்க்கும் வகையில் பேசும் காதல் மொழிகளிடையேயும் அறிவியல் உண்மைகளை, செய்திகளை இதமாகக் கலந்து 'கதிரவன் கக்கும் வெப்பத்தை பூமி உடன் உள்வாங்கிய வேகத்திலேயே வெளிப்படுத்தி விடும் தன்மையுடையது என்பதையும், அதே சமயத்தில் கடலோ,கதிரவனின்வெப்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கி, அதேபோன்று சிறிது சிறிதாக வெளிப்படுத்துகிறது' என்ற தகவல்களையெல்லாம் காதல்உணர்வுகளோடுகுழைத்துத் தந்து நம்மை இன்புறுத்த முடியும் என்பதையும் சுவைபடக் கூறி எண்பித்துள்ளார் கவிஞர்.

உலகப் பரப்பில் முக்கால் பங்கு நீரிருந்தும் மனித குலம் தாகத்தால் தவிக்க நேர்வதன் காரணத்தை விளக்க வந்த கதாநாயகன், சில புள்ளி விவரங்களைக் கூறி விவரிக் கும்போது.

“சொல்வேன், பூமியின் தண்ணிரில் 97 சதம் கடல் கொண்ட நீர் உப்புநீர், குடிக்க உதவாத நீர். மிச்சமுள்ள 3சதம் தான் நிலம் கொண்ட நீர் அதில் 1 சதம் தண்ணீர் துருவப் பிரதேசங்களில் பனிமலைகளில் உறைந்து கிடக்கிறது.

1சதம் தண்ணீர் கண்டுகொள்ள முடியாத ஆழத்தில் மொண்டு கொள்ள முடியாத பள்ளத்தில் கிடக்கிறது மனித குலம் பயன்படுத்துவ தெல்லாம் மிச்சமுள்ள 1சதத்தைத்தான்"

எனக் கூறுவதைக் கேட்ட தமிழ் ரோஜா அதிர்ந்து போனாள். அடுத்து அவள் கொண்ட அச்ச உணர்வு,