பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135


புதிய அனுபவம் பெறும் வகையில் மீனவர் நால்வரோடு காதலன் கலைவண்ணனும் காதலி தமிழ் ரோஜாவும் ஆழ்கடலை நோக்கிப் படகு பாய்ந்து செல்லும் போது தமிழ் ரோஜா அச்சத்தால்,மிரள்கிறாள். அச்சம் போக்க, கலைவண்ணன் கடலில் சாதனைசெய்தவர்களின் சாதனை களையெல்லாம் கூறித் தேற்றுகிறான். அதே சமயத்தில் தமிழனுக்கு (எதனையும்) “சாதிக்கும் மூளையிருந்தும் சோதிக்கும் முயற்சி இல்லை" எனத் தமிழனின் தாழ்ந்த நிலையைச் சுட்டிக் காட்டும் வகையில் அவனது போக்கைக் கேலியும் கிண்டலுமாக,

“வாழ்நாளில் 66,000 லிட்டர் தண்ணீர் குடித்தான், ஆயுளில் மூன்றில் ஒருபங்கு தூங்கினான்; நான்கு கோடிமுறை இமைத்தான்; நாலரை லட்சம் டன் ரத்தத்தை இதயத்தால் இறைக்கவைத்தான், 35 ஆயிரம் கிலோ உணவு - அதாவது எடையில் இந்திய யானைகள் ஏழு - தின்றான்; மரித்துப் போனான்"

எனக் கூறுவதன் மூலம் தமிழன் குறிக்கோளோ முனைப்போ இல்லாத வெறும் சோற்றுப் பிண்டமாக வாழ்ந்து மடியும் கொடுமையை நகைச்சுவை உணர்வோடு கூறி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறார் கவியரசு. அதே நேரத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை அவன் உண்பது பருகுவது சுவாசிப்பது முதலானவற்றின் அறிவியல் புள்ளிவிவரங்கள்நம்மைமலைக்கச் செய்வதோடு சிந்திக்கவும் செய்கின்றன.

கடல் அலைகளின்தன்மையையும் அதன் வேகமான வீச்சுக்களையும் பற்றிகலைவண்ணன்விளக்கும்போது, "அலையின் முதுகில் ஏறிக்கொண்டு. உலகம் சுற்றிவர"