பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

முடியும் எனும் வியக்கவைக்கும் அறிவியல் செய்தியைக் கூறி, மேலும் அதைத் தெளிவாக்கும் வகையில்,

"தென் கடலில் தோன்றும் பேரலைகள் இருபத்துநான்கு மணி ஐம்பது நிமிடத்தில் உலகத்தைச் சுற்றிவிட்டு ஓடிவந்து விடுகின்றன."என்ற அறிவியல் பூர்வமான கடலியல் தகவலைத் தந்து வியப்பூட்டுகிறார்.

இந்த நிலவுலகம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதையும் நிலவுகிலிருந்து நிலா எவ்வாறு எழுந்து வடிவு பெற்றது என்ற தகவல்களையெல்லாம்இலக்கியச் சுவையோடு படிப்போர்க்கு உணர்த்த விழைகிறார் கவிஞர்.

எங்கும் நிலவொளிபொங்கும் பெளர்ணமியின் போது'கடல் ஏன் பொங்கியெழ வேண்டும்?" என்ற ஐயவுணர்வு'பெளர்ணமி நிலவில் அலைகளோடு சடுகுடு விளை யாடும் நிலவுக் கிரணங்களில்' நெஞ்சம் கரைந்தவளான தமிழ் ரோஜாவுக்கு எழுகிறது.

அதற்கு விடை கூறவந்த கலைவண்ணன்,"பிரிந்துபோன மக்களைப் பார்த்தால் பெற்ற தாய் பொங்கமாட்டாளா?”

என எதிர்வினாபோடும் வகையில் விடையிறுக்கிறான்.

இதைக்கேட்ட தமிழ் ரோஜா,

"யார் மகள்? யார் தாய்?" என வினயமாக வினவுகிறாள்.

இத்தருணத்தைப் பயன்படுத்தி ஒரு அறிவியல் செய்தியை - பூமியினின்றும் நிலவு தோன்றிய வரலாற்றைச் சுருக்கமாக விவரிக்கும் முறையில்.