பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

என்ற உண்மை உணர்த்தப்பட்டிருக்கிறது நிலாவை என்று கொடுத்த பசிபிக் சமுத்திரத்தின் கர்ப்பப்பை இப்போதுகாலியாயிருக்கிறது...'

எனக் கூறி விளக்குகிறான், இதைக் கேட்ட தமிழ் ரோஜா வியப்பு மேலிட்டவளாக,

"அவ்வளவு பெரிய பள்ளமா?

என வியந்து வினவுகிறாள். இதைக் கேட்ட கலைவண்ணன்,

"பள்ளம் பெரும் பள்ளம், எவரெஸ்ட்டை வெட்டி உள்ளே போட்டாலும் இன்னும் மிச்சமிருக்கும்."

இதைக் கேட்ட தமிழ் ரோஜா "மலையை ஏன் வெட்டிப் போட வேண்டும். கடலுக்குள் மலைகள் இல்லையா?"எனவினவியபோது, கலைவண்ணன் பதிலுரையாக, "கடலுக்குள் மலைகள் இருக்கின்றன” எனக்கூறுவதோட மையாது,

"கடலுக்குள் மூழ்கிய மலைகளின் மூழ்காத உச்சிகளே தீவுகள்...'

“...மத்திய பசிபிக்கின் குறுக்கே இரண்டாயிரம் மைல் நீளமுள்ள மலை முகட்டின் கடல்கொள்ள முடியாத சிகரங்களே ஹவாய்த்தீவுகள், இந்துமகா சமுத்திரத்தில் இந்தியாவிலிருந்து அண்டார்டிகா வரை ஒரு மலைத்தொடர் போகிறது. அந்த மலைத் தொடரில் மூழ்காத உச்சிகளே மடகாஸ்கர் இலங்கை - மாலத்தீவுகள் - லட்சத்தீவுகள்."