பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

கடல் ஆழத்திலும் அரிய உயிரினங்கள் எவ்வாறெல்லாம் வாழ்கின்றன.அவற்றின் வாழ்க்கைப்போராட்டம்எத்தகையது என்பதையெல்லாம் விளக்க வந்த கவிஞர்,

"இந்தச் சூரியக்கதிர் இருக்கிறதே இது 350 அடிஆழம் வரைதான் தண்ணீர் துளைக்கும், அதற்குக் கீழே இருள்தான்! இருள்தான்! இந்தக் கடல் தோன்றிய நாள் தொட்டு இன்றுவரை அங்கே இரவுதான், ஆனால், அங்கே வாழும் பிராணிகள் இருளில் இறந்து போகவில்லை, ஸ்குவிட் போன்ற பிராணிகள் தங்கள் உடம்பிலேயே வெளிச்சம் போட்டு உலவுகின்றன - தங்கள் சொந்தச் செலவில் சுயவெளிச்சம் போட்டுக் கொள்ளும் சில மனிதர்களைப் போல.”

என இன்றையசமுதாயக்கோணல் நிலையைச் சுட்டிக் காட்டும் வகையில் ஆழ்கடல் உயிரினமான ஸ்குவிட் போன்றவை எவ்வாறு தங்கள் உடம்பிலிருந்தே ஒளியை உருவாக்கி, அதன் உதவி கொண்டு உலா வருகின்றன என்ற அறிவியல் செய்தியைத் தந்து விளக்குகிறார்.

அதுமட்டுமல்ல, ஆழ்கடல் உயிரினங்களில் ஒன்றான 'அக்டோபஸ்' எனும் எண்காலி உயிரினம் தன் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்து கொள்ள எத்தகைய வழிமுறைகளைக் கையாண்டு தற்காத்துக் கொள்கின்றது என்பதை,

"எதிரி துரத்தினால் அதன் உடம்பு சிலவண்ணத் திரவங்கள் கக்கும், கடல்நீரை நிறம்மாற்றி எதிரியின் கண்ணைக் குருடாக்கும்.தண்ணீர் தெளிவதற்குள் தப்பித்தோடி விடும்."

எனக் கூறி அக்டோபசின் தந்திரமிகு வாழ்க்கை முறையை நம்முன் கொண்டு வந்து காட்டிவிடுகிறார்.