பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141


கடல் நீரோட்டங்களின் தன்மை யையும் அதனால் நாடுகளிடையே ஏற்படும் நன்மைகளையும்,

"கடலடியில் இரண்டுநீரோட்டங்கள் ஒன்று வெப்ப நீரோட்டம்; இன்னொன்று குளிர் நீரோட்டம். கடலின் வெப்ப நீரோட்டம் தான் ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளைக் கொஞ்சம்சூடுபடுத்தி வைத்திருக்கிறது.இல்லையென்றால் கிரீன்லாந்தைப் போல அந்த நாடுகளும் பனிப் பாலைகளாய் இருந்திருக்கும்."

“கடல்வெறும் கடலல்ல;கருணைக் கடல்.அதுஇன்னொருகருணையும் புரிகிறதுபூமியின்தட்பவெப்பத்தை வாங்கிப் பகிர்ந்தளிக்கும் வங்கி அது.”

எனக்கூறி கடல் எப்படியெல்லாம் தட்பவெப்ப நிலையைத் தன்னளவில் பெற்று பங்கிட்டுச் சமனப்படுத்தி வழங்கி, மன்பதை வாழ் உயிரினங்களின் வாழ்க்கைக்கு உதவுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக விளக்கும் வகையில்,

"பூமத்திய ரேகைக்கு அருகில் கிடைக்கும்வெப்பத்தைத் துருவப் பிரதேசங்களுக்கும் துருவப் பிரதேசங்களின்குளிரை பூமத்திய ரேகைப் பிரதேசங்களுக்கும் எடுத்துச் செல்கிறது.”

என்ற சுவையான, பயன்மிகு அறிவியல் செய்திகளைக் கதை யோட்டத்தோடு கூறி நம்மை மகிழ்விக்கிறார்.

பழுதடைந்து இயங்காநிலைபெற்ற எந்திரப் படகை விடுத்து இருக்கும் பொருட்களை வைத்து, காற்றால் இயங்கும் பாய்மரப் படகு தயார் செய்து உணவும் நீருமின்றி