பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்


விமானங்கள் அந்த எல்லைக்குள்
நுழைந்தவுடன் வெடித்துச் சிதறின.
அறுபத்திரண்டு கப்பல்களும் பதினெட்டு
விமானங்களும் இரண்டாயிரம் மனிதர்களும்
அதற்குள் தொலைந்து போனதாய்ச்
சொன்னார்கள்.

தப்பிப் பிழைத்த ஒரு விமானி சொன்னார்
'விமானத்தை ஏதோ ஒரு சக்தி இழுத்தது.
விமானமே வேலை நிறுத்தம் செய்தது. சற்று
நேரத்தில் வெடித்துவிட்டது.'
பெர்மூடாஸ் முக்கோணத்துக்கு மேலே பல
மைல் தூரத்துக்கும் பரவியிருக்கும் காந்த
சக்திதான் அதற்குக் காரணம் என்ற ஒரு
கற்பனை முடிவுக்கு வந்தவர்கள் அதற்குள்
பிளாஸ்டிக் படகுகளைச் செலுத்தினார்கள்.
பிளாஸ்டிக் படகுகளையும் பெர்மூடாஸ்
சிதறு தேங்காய் போட்டது. பிறகுதான் பிசாசுகள்
வாழும் பெர்மூடாஸ் என்று உலகம் பேசத்
தொடங்கியது

ஆனால், ரஷ்யர்கள் மட்டும் அதை
நம்பவில்லை 1982இல் 'விட்யாஸ்' என்ற
கப்பலில் புறப்பட்டு முக்கோண
எல்லைக்குச் சற்றே தூரத்தில் நிறுத்தித்
துப்பறிந்தார்கள். கொஞ்சம் முன்னேறவும்
கப்பலில் இருந்தவர்களுக்குக் கை-கால்
விளங்கவில்லை. புயலின் சின்னம்
எதுவுமில்லாமல். புயல் வீசுவதாய்க் கருவி
காட்டியது. அதன் பிறகுதான் உண்மை
அறியப்பட்டது.