பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

145


பெர்மூடாஸில் ராட்சத நீர்ச்சுழிகள்
உண்டாகி, நிரந்தரமாய் சுழல்கின்றன.
அதன்மேல் அசுரக் சூறாவளி ஒன்று
அமைதியாய் வீசிக் கொண்டிருக்கிறது.
அதுவே கப்பல்களும் விமானங்களும்
கவிழக் காரணம். இந்த விஞ்ஞான நெருப்பு
வீசப்பட்டவுடன், அதுவரை நம்பப்பட்டு
வந்த பிசாசு இறந்துவிட்டது.
அதைப்போலத்தான் இதுவும்
கடல்நீரின் ஏற்றவற்றத்தில் படகு அமிழலாம்
எழும்பலாம்.

என பெர்மூடாஸ் தீவில் இயற்கையாய் நிகழ்கின்ற ராட்சத நீர்ச் சுழிகளும் அதன்மேல் வீசுகின்றன அசுரச் சூறாவளியும் தோன்றுவதற்கான காரணங்கள் விஞ்ஞான பூர்வமாகச் கண்டறியப்படும்வரை உலகம் அதனைக் கடல் பிசாசாகவே கண்டு மருண்ட காட்சியை அழகுறச் சித்தரித்துள்ளார்.

இதே போன்று கடல் நீரில் ஏற்ற இறக்கத்தால் படகுகள் தாழ அமிழவோ மேலே எழும்பவோ இயலும். இவ்வறிவியல் உண்மையை அறியா மக்கள் அதனைக் கடல் பிசாசுகள் தரும் தொல்லையாகக் கருதி அஞ்சுவர் என்ப தையும் தெளிவாக்குகிறார்.

இச்செய்தி பார்சிலோனாப் பகுதியில் உள்ள காந்த மலைகளால் இரும்புக் கப்பல்கள் ஈர்க்கப்பட்டன என முன்பு விளக்கப்பட்ட செய்தியை நமக்கு நினைவூட்டவே செய்கிறது.

இவ்வாறு கவியரசு அவர்கள் "தண்ணீர் தேசம்" எனும் காவியம் முழுமையும் ஆங்காங்கே அறிவியல் செய்திகளை கலைவண்ணன் மூலம் கூறச் செய்து, ஒரு